Followers

Wednesday, July 9, 2014

குளியல்


வணக்கம் நண்பர்களே!
                    எனக்கு குளிப்பது என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று. ஒரு நாளைக்கு இரண்டு முறை கட்டாயம். சென்னையில் இருக்கும் பொழுது மூன்று முறை கூட குளிப்பேன்.

எனக்கு குளித்துவிட்டு வந்து அமர்ந்தால் அப்படி ஒரு ஆனந்தம் எனக்கு ஏற்படும். இதனை ஏன் உங்களிடம் சொல்லுகிறேன் என்றால் உங்களுக்கு எந்தளவுக்கு உடல் சுத்தமாக இருக்கின்றதோ அந்தளவு ஆன்மீகத்தில் பயிற்சி செய்யமுடியும். மூச்சு பயிற்சி செய்தால் குளிக்ககூட தேவையில்லை என்று சொல்லுவார்கள். எப்படி இருந்தாலும் குளித்தால் அது ஒரு தனி ஆனந்தம்.

சென்னையில் இருந்தால் கண்டிப்பாக இரண்டு வேலை குளிக்காமல் இருக்கமுடியாது. இங்கு வாகனங்கள் வெளியிடும் கரும்புகை உங்களை கரியாக மாற்றிவிடும். இங்கு வேலை செய்பவர்கள் மற்றும் வசிப்பவர்கள் முடிந்தளவுக்கு இரண்டு வேலை குளிப்பது நல்லது.

வெளிநாடுகளில் குளிப்பதை ஒரு தனிக்கலையாக வைத்திருப்பதாக பேப்பரில் படித்திருக்கிறேன். நமது கோவிலுக்கு செல்லும்பொழுது கூட நீங்கள் குளித்துவிட்டு தான் செல்லவேண்டும் என்று சொல்லிருக்கிறார்கள்.

நமது உடல் தெய்வீக சக்தியை பெறுவதற்க்கு தயாராகிவிடும் என்பதற்க்காக குளித்துவிட்டு செல்லுங்கள் என்று சொல்லியுள்ளார்கள். அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியவுடன் குளித்துவிட்டால் அன்றைய நாளில் ஏற்பட்ட நிகழ்வுகள் அனைத்தும் சரியாகவிடும். அதாவது கெட்ட நிகழ்வுகள் அனைத்தையும் உங்களின் மனதில் இருந்து மறந்துவிடும். எங்காவது சென்று நீச்சல் அடித்து குளிப்பது போல் இருந்தால் கண்டிப்பாக சென்று குளியுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: