Followers

Wednesday, August 6, 2014

விரைய தசா பகுதி 38


வணக்கம் நண்பர்களே!
                    திருப்பூரில் இருந்து இந்த பதிவை தருகிறேன். பொதுவாக இந்த காலத்தில் அதிகமாக வேலை செய்வது இந்த விரைய தசாவாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஆடம்பரம் வேண்டாம் என்று சொல்லிருந்தேன். அதனை பல பேர் வரவேற்றார்கள். 

உங்களை அதிகம் செலவு செய்ய தூண்டுவது இந்த விரைய தசா தான். உங்களின் விரைத்தை இந்த வீட்டில் உள்ள கிரகம் அல்லது இந்த வீட்டு அதிபதியாக இருக்கும்.

இந்த வீட்டு தசா நடந்தாலும் நடைபெறாவிட்டாலும் இந்த வீட்டோடு அதிபர் யார் என்று பார்த்து அந்த வீட்டு அதிபருக்கு ஒரு பரிகாரத்தை செய்துவிடுவது நல்லது. அந்த வீட்டில் ஏதாவது கிரங்கள் அமர்ந்தால் அந்த கிரகத்திற்க்கு ஒரு பரிகாரத்தை செய்துவிடுவது நல்லது.

இதற்க்கு பரிகாரம் என்று அதிகமாக செலவு செய்யாதீர்கள். ஒரு தீபம் மட்டும் ஏற்றி வழிப்பட்டு வந்தால் போதும். அந்த கிரகத்தின் நாளாக பார்த்த தீபம் மட்டும் ஏற்றி வழிப்பட்டு வருவது நல்லது.

கிரகத்திற்க்கு பரிகாரம் செய்ய முடியாவில்லை என்றால் அந்தந்த கிரகத்தின் அதிதேவதை என்ன என்று பார்த்த அதற்கு நீங்கள் ஒரு வழிபாட்டை செய்துவிடுவது நல்லது.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: