Followers

Sunday, August 3, 2014

கர்மவினை


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு நண்பரின் பதிவை படிக்க நேர்ந்தது. அதில் சாமியார்கள் அவர்களின் கர்மவி்னையை அவர்களே அனுபவிக்கிறார்கள். நீங்கள் தான் சென்று கர்மவினையை குறைக்கிறேன் என்று சாமியார்களை தேடிச்செல்லுகிறீர்கள் என்று குறிப்பிட்டு இருந்தார். இதனைப்பற்றி ஒன்றை சொல்லவேண்டும் என்று நினைத்து உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன்.

சாமியார்கள் என்பவர்கள் இந்த பிறவியோடு நான் இறைவனிடம் ஐக்கியமாகிவிடுகிறேன் என்று இருப்பவர்கள். அவர்களிடம் எந்த கர்மாவும் இருக்க கூடாது என்று நினைப்பார்கள்.  இல்லறத்தில் இருப்பவர்கள் தனி ஆட்கள் கிடையாது. அவர்களை நம்பி குடும்பம் இருக்கிறது. அவர்கள் தன்னிடம் உள்ள கர்மாவை குறைக்க பல வழிகளை செய்யவேண்டும். அதில் ஒன்று சாமியார்களை தேடிச்சென்று அவர்களை வணங்குவது.

இல்லறத்தில் உள்ளவர்கள் முடிந்தளவு சாமர்த்தியமாக தான் இருக்கவேண்டும். அவர்களுக்கு என்னன்ன வழிகள் இருக்கின்றனவோ அதனை எல்லாம் நீங்கள் பின்பற்ற வேண்டும். சாமியார்களின் வாழ்க்கையும் உங்களின் வாழ்க்கையும் கம்பேர் செய்வது முட்டாள் தனமானது.

கர்மவினையை குறைக்க தான் அன்னதானமே செய்கிறோம். இப்படி பல வழிகள் இருக்கின்றன. அதனை எல்லாம் நீங்கள் பின்பற்றி நல்ல முறையில் வாழுங்கள். இல்லறத்தில் இருப்பவர்களுக்கு நான் சொல்லும் ஒரு வார்த்தை நீங்கள் புத்திசாலியாக இருங்கள்.

சாமியார்களை போல் வாழவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இல்லறத்திற்க்குள் சென்றுவிடாதீர்கள். நீங்கள் பிரம்மசாரியாகவே உங்களின் வாழ்க்கையை நடத்துங்கள். சாமியார்களிடம் என்ன கிடைக்கும் என்று எதிர்பார்க்கவேண்டும். சாமியார்கள் எப்படி இருக்கிறார்கள் என்று நீங்கள் பார்த்தால் உங்களின் குடும்பம் வீதிக்கு வந்துவிடும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: