Followers

Friday, August 15, 2014

ஹோமம் செய்யும்பொழுது


வணக்கம் நண்பர்களே!
                    முன்பு நிறைய பேருக்கு அம்மனின் ஹோமம் செய்துக்கொடுத்து இருக்கிறேன். நமது ஜாதககதம்பம் வழியாக வந்தவர்களுக்கு எல்லாம் முடிந்தளவு செய்துக்கொடுத்து இருக்கிறேன். இடையில் கொஞ்ச காலம் இதனை தவிர்த்து வந்தேன். இன்றைய தினம் வரை தவிர்த்து வந்தேன். இனி வரும் வாடிக்கையாளருக்கு செய்யலாம் என்று நினைத்து இருக்கிறேன். பார்க்கலாம்.

பொதுவாக எந்த ஹோமம் செய்தாலும் நீங்கள் அந்த ஹாேமம் செய்வதற்க்கு முன்பு நீங்கள் சாப்பிடகூடாது. திரவ உணவை வேண்டுமானால் நீங்கள் அருந்தலாம்.

ஹோமம் செய்வது நமக்காக செய்கிறோம் நாம் அந்த சக்தியின் ஆற்றலை பெறவேண்டும் என்பதற்க்காக செய்கிறோம் என்று நினைத்து நல்ல ஆன்மீக சிந்தனையோடு இருக்கவேண்டும். நீங்கள் சாப்பிட்டு அமர்ந்தால் ஏதோ பிக்னிக் செல்வது போல் ஆகிவிடும்.

ஒவ்வொரு ஹோமம் செய்யும்பொழுதும் அக்னியை வைத்து தான் செய்கிறோம். அந்த அக்னியிடம் நாம் கேட்கும் வரத்தை அந்த அக்னி நமக்கு பெற்று தந்துவிடும். ஏதோ நெருப்பு தானே என்று இருந்துவிடகூடாது. இந்து மதத்தில் உள்ள மிகப்பெரிய விசயங்களில் ஒன்று அக்னி.

அக்னியை அவமதிப்பதுபோல் நாம் ஒரு காலும் நடந்துக்கொள்ளகூடாது. அப்படி நம்மால் நடந்துக்கொள்ளமுடியவில்லை என்றால் ஹோமத்தை செய்யாதீர்கள். தேவையில்லாமல் நாமே சென்று பிரச்சினையில் மாட்டிக்கொள்வது போல் ஆகிவிடும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: