Followers

Thursday, August 14, 2014

கேள்வி


வணக்கம் நண்பர்களே!
                    இரண்டாயிரம் பதிவிற்க்கு பின்னோட்டம் மற்றும் போனில் வாழ்த்து தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

கிராம பகுதியில் நாம் சோதிடம் பார்க்க சென்றால் நம்மை அங்குள்ளவர்கள் முதலில் சோதனை செய்வார்கள். எப்படி என்றால் அவர்களின் ஜாதகத்தை கொடுத்து இவருக்கு எத்தனை குழந்தைகள் என்று கேட்பார்கள். ஆண் குழந்தை எத்தனை மற்றும் பெண் குழந்தைகள் எத்தனை என்று கேட்பார்கள். இதனை நாம் சொல்ல வேண்டும் இதனை மட்டும் சொல்லிவிட்டால் நம்மை ஒரு நல்ல சோதிடர் என்று ஏற்றுக்கொள்வார்கள்.

உண்மையில் மிக சிக்கலான கேள்வி. நீங்கள் கிராம பகுதிகளுக்கு இந்த காலத்தில் சென்றால் கூட இந்த கேள்வியை தான் முதலில் உங்களிடம் கேட்பார்கள். கிராம பகுதியில் சோதிடரை இந்த கேள்வி கேட்டு தான் உங்களை சோதனை செய்வார்கள்.

உண்மையில் இந்த கேள்விக்கு நீங்கள் பதில் அளிக்க முடியுமா? அப்படி பதில் அளிக்கமுடிந்தால் சோதிடத்தில் அதற்கு என்ன வழி என்று சொல்லுங்கள் பார்க்கலாம். 

சோதிடத்தில் எப்படி நாம் இதனை கண்டுபிடிப்பது?

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

2 comments:

Unknown said...

thuruva kanitha muraiyil

Dady said...

குழந்தைகள் எண்ணிக்கை:

5ம் அதிபதியை வைத்து சொல்லலாம்..
உதாரணம்:

5 க்கு உடயவன் 1ல் இருந்தால் 3 குழந்தைகள்...3ல் இருந்தால் 2 ண்டு குழந்தைகள்...இப்படியாக...


ஆண் பெண் அறிதல்:

சனி ஆண் ராசியில் இருந்தால் ஆண் பிள்ளை..

செவ் பெண் ராசியில் இருந்தால் பெண்..

லக்னம் ஆணாகி அதை ஆண் பார்த்தாலும் ,ஆண் இருந்தாலும் ஆண் பிள்ளை..

லக்னம் பெண்ணாகி அதில் பெண் இருந்தாலும் பெண் பார்த்தாலும் பெண்..

ஆண் கிரகம் பலம் பெற்று ஆண் ராசியில் இருந்தால் ஆண்,பெண் ராசியில் இருந்தாலும் ஆண்...

பெண் கிரகம் பலம் பெற்று பெண் ராசியில் இருந்தாலும்,ஆண் ராசியில் இருந்தாலும் பெண்னே..

குரு,லக்,சந்,சூரி இவர்களுள் யார் பலம் பெற்று எந்த ராசியில் இருக்கிறாரோ அந்த பிள்ளை ஜனனம் ஆகும்..

இது சாதக அல்ங்காரத்தில் நான் படித்தது...வேறு எளிய முறை இருந்தால் கூறுங்கள் அய்யா..என்னை போல் ஆரம்ப நிலையில் உள்ளவர்க்கு உதவும்...நன்றி...