Followers

Friday, August 29, 2014

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்


வணக்கம் நண்பர்களே!
                    இந்து மதத்தில் பண்டிக்கைக்கு குறைவு இல்லை. நிறைய பண்டிகைகளை வைத்திருக்கும் இரகசியம் அதன் வழியாக மக்கள் மகிழ்ச்சியோடு இருக்கவேண்டும் என்று நினைத்து வைத்திருக்கிறார்கள். 

இந்த பண்டிகைகள் இந்த காலத்திற்க்கு ஏற்ற ஒன்றா என்று கேட்டால் இது எல்லாம் வேண்டியதில்லை என்று நான் சொல்லுவேன். அப்படியே பண்டிகை கொண்டாடி தான் ஆகவேண்டும் என்று நினைத்தால் காலையில் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் கொண்டாடிவிட்டு அதன் பிறகு அலுவலகத்திற்க்கு அல்லது வேலையை பார்க்க சென்றுவிடவேண்டும்.

இன்றைய உலகம் அவசர உலகம் என்று சொல்லிக்கொண்டு தேவையில்லாமல் நமது நேரத்தை வீணடித்துக்கொண்டு இருக்ககூடாது. ஒரு ஆன்மீகவாதியாக இருந்துக்கொண்டு இப்படி சொல்லுகிறாரே என்ற நீங்கள் நினைப்பீர்கள்.

ஆன்மீகம் என்ற பெயரில் நாம் நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்க கூடாது என்பதால் இப்படி சொல்லுகிறேன். நமது அரசாங்கம் விடுமுறை விட்டே நமது நாட்டை காலி செய்ய நாமே காரணமாக இருக்ககூடாது.

தொடர்ச்சியாக வேலை செய்யும்பொழுது மட்டுமே ஒரு கம்பெனி அல்லது அரசாங்கம் நல்ல முன்னேற்றத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம். மக்களை சோம்பேறியாக மாற்றகூடாது.

நான் விடுமுறை காலத்தில் கூட ஜாதககதம்பத்தில் பதிவுகள் எழுதுவதற்க்கு காரணம் விடுமுறை என்பது இருக்ககூடாது என்று நினைக்கிறேன். மக்களை சோம்பேறி ஆக்குவது அது ஆன்மீகமாக கூட இருக்ககூடாது என்று நான் நினைக்கிறேன். 

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

2 comments:

V.C.Arunchand said...

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

thamirabaranithenral said...

good view. nobody knows or agrees this. pathetic. everybody should think in the same way, as festivals are for 'worshiping the "work" and not wasting time.