Followers

Thursday, September 18, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                    காலையில் நம்பினால் நம்புங்கள் பதிவை படித்துவிட்டு நண்பர் ஒருவர் என்னை தொடர்புக்கொண்டு ஏன் சார் இப்படி செய்கின்றீர்கள் என்று கேட்டார்.

இந்த உலகத்தில் சாமார்த்தியமாக இருப்பவன் தான் பிழைக்க முடியும். நாம் ஒரு தொழில் செய்யும்பொழுது அந்த தொழிலில் போட்டி இருக்கதானே செய்யும். அந்த போட்டியை பார்த்து நாம் ஒதுங்கிவிட்டால் நம்மை பார்த்து இந்த உலகம் சிரிக்கும். இது தவறு என்று தெரிந்தும் அதனை செய்வது எங்களின் வேலையாகவே வைத்திருக்கிறோம்.

இந்த மாதிரி செய்தால் மட்டுமே நமக்கு கர்மவினை வராது. எவர் ஒருவருடைய பூஜையை எடுக்கிறோமோ அவர்க்கு தான் கர்மவினை போய் சேரும். நீங்களே பார்த்து இருக்கலாம். உங்களின் கர்மவினை தீர்ந்து உங்களுக்கு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தி தருகிறோம் என்று தானே சொல்லுகிறார்கள். இந்த வினை அவர்களுக்கு போய் சேரும்பொழுது அவர்களின் கர்மவினையை எடுக்க தெரியாதா என்ன ?

கர்மவினை எடுக்க தெரிந்தவனுக்கு கண்டிப்பாக அவனின் வினையை எடுக்க தெரியும் அதனால் நீங்கள் கவலைப்படதேவையில்லை.ஆன்மீகம் என்றால் விளையாட்டு இல்லை. ஆன்மீகத்தில் எது வேண்டுமானாலும் நடைபெறலாம். 

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: