Followers

Monday, September 22, 2014

நம்பினால் நம்புங்கள்


வணக்கம் நண்பர்களே!
                      இது ஒரு புதுமையான ஒரு விசயம் அதாவது ஒரு நண்பர் என்னிடம் பேசும்பொழுது நீங்கள் ஜாதககதம்பத்தை எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள். இதனை தடுப்பதற்க்கு யாராவது ஆன்மீகவழியில் முயற்சி செய்து உள்ளார்களா என்று கேட்டார்.

உண்மையான ஒரு கருத்து இது. பல பேர் முயற்சி செய்து இருக்கிறார்கள். நானே உங்களிடம் சொல்லியுள்ளேன் ஜாதககதம்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லியுள்ளேன். அதற்கு காரணம் ஆன்மீகவழியில் எதிரிகள் அதிகம் இருப்பார்கள்.

ஒரு சைட்டை எழுதவிடாமல் செய்து விடுபவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். நானே பல சைட்டை முடக்கி இருக்கிறேன். தொழில் என்று வந்துவிட்டால் வாழ்வா சாவா என்று இருக்கவேண்டும். 

என்னிடம் குரு சொல்லியுள்ளார் வல்லவனுக்கு வல்லவன் கண்டிப்பாக வருவான். அவன் வந்து அடித்தான் என்றால் அடி வாங்கி தான் ஆகவேண்டும் என்று சொல்லியுள்ளார். முடிந்தால் உயிரை காப்பாற்றிக்கொள்ள தான் வழி தேடவேண்டுமே தவிர எதிர்த்து போர் செய்ய கூடாது என்பார். அந்த நேரத்தில் அடிவாங்கி தான் ஆகவேண்டும்.

ஒரு தடவை அடி வாங்கினால் அதில் இருந்து மீள பல நாட்கள் ஆகும். அப்படி ஒரு நரகவதையை அனுபவிக்க தான் வேண்டும். ஒரு சிலர் கொஞ்சம் மேலே சென்று குடும்பத்தை கை வைத்துவிடுவார்கள். நாம் பிழைத்துக்கொள்ளமுடியும் குடும்பத்தில் உள்ளவர்கள் கை வைக்கும்பொழுது அவர்களுக்கு மரணம் வந்துவிடும்.

நான் இந்த நேரத்தில் ஒரு அலுவலகம் போட்டு கூட இதனை எல்லாம் செய்யமுடியும் ஆனால் அது எனக்கு பிரச்சினை என்பதால் மட்டுமே அதனை எல்லாம் நான் செய்யவில்லை. நான் எங்கு தங்கியிருக்கிறேன் என்பதை கூட அடுத்தவர்களுக்கு சொல்லுவதில்லை. இடத்தை மாற்றிக்கொண்டே இருக்கவேண்டும் அல்லது அந்த இடத்திற்க்கு மிகப்பெரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வைத்துக்கொள்ளவேண்டும்.

செயற்க்கை கோளை கூட நிறுத்தலாம் சைட்டை நிறுத்துவது பெரிய விசயமா? உங்களுக்கு எல்லாம் சொல்லிக்கொள்வது இதனை எல்லாம் கற்றுகொள்ளுங்கள் என்று தான் சொல்லுவேன். ஏன் என்றால் இந்த பிரபஞ்சத்தில் சக்தியின் வலிமை என்ன என்று உணர்ந்துக்கொள்ளலாம். ரொம்ப ஜாலியான விசயம் ஏன்டா என்னடா இது ஜாலியான விசயம் என்று கேட்கிறீர்களாக ஆன்மீகத்தில் ஜாலியாக இருக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

1 comment:

nallur parames said...

Ithu enna vipareetha vilayaatu?