Followers

Monday, September 22, 2014

செய்யகூடாத செயல்


வணக்கம் நண்பர்களே!
                      நாம் கோவிலுக்கு செல்லுகிறோம் என்று வைத்துக்கொள்வோம். அந்த கோவிலுக்கு சென்ற பிறகு வணங்கிவிட்டு நேரிடையாக நமது வீட்டிற்க்கு வந்துவிடவேண்டும்.

இன்றைய பல பெரிய கோவில்களின் வாசலில் பார்த்தால் நிறைய குறி சொல்லும் கடைகளும் சோதிடம் சொல்லும் கடைகளும் தான் இருக்கும். கோவிலுக்கு செல்லும் பலரை நான் கவனித்து பார்த்து இருக்கிறேன். சாமி தரிசனம் முடிந்த பிறகு நேரிடையாக இந்த கடைகளுக்கு சென்று குறி கேட்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

மனம் நிம்மதிக்காக கோவிலுக்கு சென்ற இடத்தில் இப்படி குறி கேட்பது தவறான ஒன்று. நாம் கோவிலின் சக்தியை எடுத்துக்கொள்ள கோவிலுக்கு செல்லுகிறோம் அதனை எடுத்த பிறகு நமது வீட்டிற்க்கு தான் வரவேண்டும்.

வைத்தீஸ்வரன் கோவிலுக்கு ஒரு நண்பரை பார்ப்பதற்க்கு சென்று இருந்தேன். நான் பஸ்ஸை விட்டு இறங்கியவுடன் பலர் என்னை தூக்கி கொண்டே சென்றுவிடுவார்கள் போலிருக்குது இங்கு வாருங்கள் நாடி சோதிடம் பார்க்கலாம். உங்களுக்கு உள்ள பிரச்சினையை தீர்க்கிறோம் என்று பல ஏஜென்டுங்கள் அங்கு உள்ளனர்.

இது எல்லாம் ஒரு கோவிலின் புனிததன்மையை கெடுக்கும் ஒரு செயலாகவே இருக்கும். அதனால் நீங்கள் எந்த கோவிலுக்கு சென்றாலும் குறி கேட்பது சோதிடம் பார்ப்பதை செய்யாதீர்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: