Followers

Tuesday, October 7, 2014

சோதிட அனுபவம்


வணக்கம் நண்பர்களே!
                      ஒரு நண்பரை நான் சந்தித்தேன். அவரின் ஜாதகத்தில் சந்திரன் ஆறாவது வீட்டில் இருந்தது. ஆறாவது வீட்டு சந்திரனை குருகிரகம் தன் ஒன்பதாவது பார்வையில் பார்க்கிறது. அவர் ஒரு தொழில் செய்துக்கொண்டு இருக்கிறார். 

குரு கிரகம் சந்திரனை பார்ப்பதால் அவருக்கு பணம் விசயத்தில் பற்றாக்குறை ஏற்படவில்லை. பொதுவாக குருவும் சந்திரனும் சேர்ந்து இருக்கும்பொழுது அவர்களுக்கு பணம் விசயத்தில் பற்றாக்குறை ஏற்படாது. அதேப்போல் சந்திரனை குரு கிரகம் பார்த்தாலும் பணப்பற்றாக்குறை ஏற்படுவதில்லை என்னுடைய அனுபவத்தில் ஒரு சிலரை நான் இப்படி பார்த்து இருக்கிறேன்.

இவருக்கு பிரச்சினை என்ன என்றால் ஒரு தொழிலும் இவருக்கு நிலையாக அமைவதில்லை. உடனே நீங்கள் கேட்கலாம் தொழில் வீட்டை வைத்து தொழிலை பார்க்காமல் குருவும் சந்திரனையும் பற்றி சொல்லுகிறீர்களே என்று தோன்றும்.

உண்மையில் ஒரு சில நேரங்களில் சம்பந்தமே இல்லாமல் இருக்கும் கிரகங்கள் அவரின் ஏதாவது ஒரு விசயத்தில் பிரச்சினையை கொடுத்துக்கொண்டு இருக்கும். அதேப்போல் இவருக்கும் அப்படி தான் நடந்தது. சந்திரனுக்கு குருவின் பார்வையால் நிலையான தொழில் இவருக்கு அமையவில்லை.

இவரும் போகாத கோவில்கள் இல்லை. பார்க்காத சோதிடர்கள் இல்லை அதனால் நான் அம்மனை வைத்து இவருக்கு நிலையான தொழில் செய்து தர வைத்தேன். உண்மையில் கிரகங்களுக்கு தான் செய்து இருக்கவேண்டும். கிரகங்களுக்கு செய்யாமல் அம்மனை வைத்து செய்து கொடுத்தேன். ஏன் என்றால் இது மிகப்பெரிய சிக்கல் என்று அம்மனால் தான் முடியும் என்று அப்படி செய்தேன்.

குரு சந்திரன் சேர்ந்து இருந்தாலும் குருவின் பார்வை சந்திரனுக்கு கிடைத்தாலும் அவர்களுக்கு வேலையில் பிரச்சினையை கொடுத்துவிடும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

1 comment:

ATOMYOGI said...

வணக்கம் நண்பரே!
//அவரின் ஜாதகத்தில் சந்திரன் ஆறாவது வீட்டில் இருந்தது. ஆறாவது வீட்டு சந்திரனை குருகிரகம் தன் ஒன்பதாவது பார்வையில் பார்க்கிறது.//
அதாவது குரு இரணடாம் வீட்டை 5 ஆம் பார்வையாய் பார்க்கிறார். அதனால் கூட அவருக்கு பணப்பற்றாக்குறை இல்லாமல் இருக்கலாம் அல்லவா.கூறியதில் தவறு இருப்பின் மன்னித்து திருத்த வேண்டுகிறேன்.