Followers

Friday, January 16, 2015

படையல்


வணக்கம் நண்பர்களே!
                      நேற்றைய பதிவில் மாட்டுப்பொங்கலைப்பற்றி சொல்லிருந்தேன். பல நண்பர்கள் அதனைப்பற்றி கேட்டு எனக்கு போன் செய்து இருந்தார்கள்.

மாட்டுப்பொங்கலுக்கு முன்னோர்களுக்கு செய்யும் படையலைப்பற்றி சொல்லிருந்தேன். இதில் தான் சந்தேகத்தை கேட்டுருந்தனர். முன்னாேர்களுக்கு தை அமாவாசை விரதம் பிடித்து செய்தாலும் மாட்டுப்பொங்கலுக்கு செய்யும் படையல் மிகவும் விஷேசமானது.

முன்னோர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை சமைத்து இலையில் பரிமாறி அவர்களுக்கு ஆண்களாக இருந்தால் வேஷ்டி சட்டை பெண்களாக இருந்தால் புடவை போன்றவற்றை வைத்து படைப்பார்கள். இதில் முன்னோர்கள் அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால் அவர்களுக்கு அசைவ உணவை சமைத்து பரிமாறுவார்கள்.

இந்த படையலை ஒரு முறை நீங்கள் செய்து பாருங்கள். நல்ல முன்னேற்றத்தை அந்த வருடத்தில் நீங்கள் பார்க்கலாம். இதனை தஞ்சாவூர் பகுதியில் அனைத்து வீடுகளிலும் பின்பற்றி வருவார்கள். பல பகுதியிலும் இதனை நான் பார்த்து இருக்கிறேன். இதனை செய்தால் நல்லது நடக்கும் என்று மட்டும் தான் நான் இந்த நேரத்தில் சொல்லமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: