Followers

Friday, January 9, 2015

முட்டுக்கட்டை போடும் பித்ருக்கள்


வணக்கம் நண்பர்களே!
                      பல நண்பர்கள் தொழில் செய்யவேண்டும் அல்லது ஏதாவது ஒரு நல்ல வேலை வேண்டும் என்று அழைபவர்களாக இருக்கின்றனர. உங்களின் ஜாதகத்தில் ஜாதகத்தை எடுத்து பித்ரு தோஷம் இருக்கின்றதா என்று முதலில் பார்த்து விடுங்கள். அதன்பிறகு உங்களின் இலக்கை நிர்ணயம் செய்யுங்கள்.

பல பேர்கள் தங்களின் ஜாதகத்தில் பித்ருதோஷம் இருக்கின்றது என்பதை கூட தெரியாமல் அல்லல்பட்டுக்கொண்டு இருக்கின்றனர். பல சோதிடர்களிடம் அவர்கள் ஜாதகத்தை காட்டியும் சோதிடர்கள் இவர்களுக்கு இருக்கும் தோஷத்தை சொல்லுவதில்லை.

பித்ருதோஷம் இருந்தால் அவர்களால் வாழ்க்கையில் ஒரு நிலையை அடையமுடியாது. பல பேர்கள் தங்களின் வாழ்வை தொலைத்துவிட்டவர்களாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு திருமண வாழ்வு அமைவதில்லை. இளம்வயதில் திருமணம் நடைபெற்றாலும் திருமண வாழ்வு பிரச்சினையை சந்திப்பதாகவே இருக்கின்றது.

ஒரு சிலர் பித்ருதோஷத்தை நீக்குகிறேன் என்று போய் தவறாக பல விசயங்களை செய்துவிட்டு வந்துவிடுகிறார்கள். பித்ருக்களுக்கு ஒழுங்கான சாந்தியை யாரும் செய்வதில்லை. சரியான முறையில் சாந்தி செய்யும் நபர்களிடம் சென்று பித்ருக்களுக்கு சாந்தி செய்தால் எல்லா பிரச்சினையிலும் இருந்து விடுபடலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

tamil nesan said...

ஐயா என் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பதாக கூறுகிறார்கள். இதற்கு சரியான பரிகாரம் என்ன என்று கூறுங்கள். நெட்டில் நிறைய தகவல்கள் கிடைப்பதால் எதை செய்வது என்று குழப்பமாக உள்ளது.சரியான வழியை காண்பிக்குமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.
என் மின்னஞ்சல் முகவரி
newtamilnesan@gmail.com