Followers

Wednesday, January 28, 2015

வாங்கி கட்டிய வரம்


வணக்கம் நண்பர்களே!
                      என்னிடம் வரும் நண்பர்களுக்கு என்னால் முடிந்தளவு அம்மனை வைத்து உதவி செய்து இருக்கிறேன். நம்மிடம் பணம் என்பதை விட வரும் நபர்கள் பயன் பெறவேண்டும் என்பதை தான் முதல் நோக்கமாக இருக்கும். வரும் நண்பர்கள் அனைவருக்கும் நடந்துவிடாது. என்ன தான் அம்மனை வைத்து நான் செய்தாலும் ஒரு சிலருக்கு தோல்வியை தழுவும் என்பதை வெளிப்படையாகவே ஏற்றுக்கொள்வேன்.

ஏன் ஒருவருக்கு நடைபெறவில்லை என்று ஆராய்ச்சி செய்து பார்த்தால் ஒரு சில உண்மைகள் வெளிவரும் அதனைப்பற்றி ஒரு பதிவில் சொல்லிருக்கிறேன். வாங்கி வந்த வரம் வாங்கி கட்டிய வரம் என்பதை சொல்லிருக்கிறேன்.

வாங்கி கட்டிய வரம் 
கடன்
     ஏதோ ஒரு தேவைக்கு நாம் கடன் வாங்கிய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதுவும் நமது பூர்வபுண்ணியம் என்றாலும் இந்த ஜென்மத்தில் நமக்கு தேவையான ஒரு சில விசயங்களுக்கு கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

கடன் வாங்கி விட்டு நம்மால் திருப்பிக்கொடுக்க முடியாத ஒரு நிலை ஏற்படும்பொழுது அது நமக்கு சிக்கலை உருவாக்கிவிடுகிறது. எப்படிப்பட்ட சிக்கல் என்பதை பார்க்கலாம்.

கடன் வாங்கினால் நமக்கு பிறரின் தோஷம் ஏற்படாது. பிறரின் எண்ண தாக்குதல் நம்மீது இருந்துக்கொண்டே இருக்கும் அப்படி எண்ண தாக்குதல் இருந்தால் நம்மால் உருபடியாக ஒன்றும் செய்யமுடியாது. பத்து பேரிடம் கடன் வாங்கிவிட்டால் இந்த பத்து பேரின் எண்ணமும் நம்மீது விழுந்தால் நாம் நிம்மதியாக இருந்துவிடமுடியாது. நாம் என்ன தான் கோவில் குளங்கள் சுற்றினாலும் நம்மால் எழுவது கடினமாகவே இருக்கும்.

கடன் வாங்கி விட்டு அதனை நாம் திரும்பிக்கொடுக்கவேண்டும். நமது நிலை அதனை கொடுக்கமுடியவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நபரிடம் நிலைமையை சொல்லி எனக்கு வரும்பொழுது எல்லாம் உங்களுக்கு தருகிறேன் என்று சொல்லிவிடுங்கள். 

நம்மை நமது உறவுகள் கவனிக்கிறார்களாே இல்லையோ நம்மை நமக்கு கடன் கொடுத்தவர் அதிகம் கவனித்துக்கொண்டு இருப்பார்கள். இந்த எண்ண தாக்குதல் நமக்கு பிரச்சினை ஏற்படுத்திவிடும்.

ஒரு மனிதன் தான் இறப்பதற்க்குள் தன்னுடைய கடனை முழுமையாக செலுத்திவிடவேண்டும். அப்படி செலுத்தினால் மட்டுமே அவனுக்கு மோட்சம் உண்டு. கடன் செலுத்தவில்லை என்றால் அது நமக்கு மறுபிறப்பை ஏற்படுத்தும் என்று சொல்லுவார்கள்.

ஒரு மனிதன் தொழிலில் தோல்வி அடைகிறான் என்றால் அவன் தொழிலுக்கு தகுந்தமாதிரி அவன் கடனை வாங்கிவிட்டு தான் தோல்வி அடைவான். அப்பொழுது நாங்கள் அவனுக்கு உதவ முன்வரும்பொழுது பிற எண்ண தாக்குதல் விழாமல் தடுத்துவிட்டு தான் அவனுக்கு வாய்ப்பு கொடுக்கிறேன். 

முடிந்தவரை சம்பந்தப்பட்ட நபருக்கு திருப்பிக்கொடுத்துவிடுங்கள் என்று சொல்லுவது உண்டு. பணம் வந்தவுடன் முதல் வேலையாக உன்னுடைய கடனை முடித்துவிட்டு வாருங்கள் என்று தான் சொல்லுவேன்.  இப்படி நாங்கள் செய்கிறோம் என்றால் கடன் கொடுத்தவர்களின் எண்ணம் எப்படி ஒருவனை கீழே தள்ளுகிறது என்று பாருங்கள்.

இதனைப்பற்றி அடுத்த பதிவிலும் தொடர்ந்து பார்க்கலாம்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: