Followers

Monday, February 23, 2015

சனி தசா பகுதி 1


வணக்கம்!
                      சனி தசாவை ஆரம்பிக்கவேண்டும் என்று நானும் பல முயற்சிகள் ஒரு மாதகாலம் எடுத்தேன். பல தடைகள் வந்து எழுதவிடாமல் சனி தடுத்தது. எப்படியும் சனிக்கிழமையாவது இந்த பதிவை தந்துவிடலாம் என்று இருந்தேன். வியாழக்கிழமை தொடர்ச்சியாக பைக்கை ஓட்டியதால் கை சுழுக்கிவிட்டது.  சனி எழுதவிடாமல் தடுக்கிறார் என்று நினைத்துக்கொண்டு இரண்டு நாட்கள் இடைவேளை விட்டு இன்று எப்படியும் எழுதிவிடவேண்டும் என்று எழுத ஆரம்பித்துவிட்டேன்.

சனியின் முதல் தன்மையே எந்த காரியத்தையும் ஒழுங்காக செய்யவிடாமல் தடுப்பது. முடுக்கிவிடுவது இதனை தான் அவர் முதலில் ஒருவருக்கு செய்வார். 

சனிதசா ஒருவருக்கு ஆரம்பித்துவிட்டால் உங்களை முதலில் கொஞ்சம் தட்டிப்பார்ப்பார். கொஞ்சம் உட்காரவைக்கலாம் என்று நினைப்பார். நாம் அதனை கண்டு பயம்க்கொள்ளகூடாது. தைரியமாக எழுந்து நடக்க ஆரம்பித்துவிடவேண்டும்.

நாம் முதலிலேயே சோர்ந்து உட்கார ஆரம்பித்துவிட்டால் நம்மை முழுவதும் ஆட்கொண்டுவிடுவார்.சனிதசாவின் முதல் பலனே இப்படி தான் அனேகம்பேருக்கு இருக்கும்.எனக்கு நடப்பது சனிதசா அல்ல. சனிப்பற்றி நிறைய செய்திகள் சொல்லவேண்டும் என்று நினைக்கும்பொழுது சனியின் தாக்கம் வரச்செய்யும்.

சனிதசாவைப்பற்றி நான் எழுதபோகும் விசயங்கள் அனைத்தும் பொதுப்பலன் போல் தான் இருக்கும். அவர் அவர்களின் ஜாதகத்திற்க்கு தகுந்தவாறு பலன்கள் இருக்கும். உங்களின் ஜாதகத்தை பார்த்துவிட்டு பயப்படதேவையில்லை என்பதை உங்களிடம் முதலில் நான் சொல்லிவிடுகிறேன்.

அடுத்த பதிவு மதியம் 2 மணிக்கு மேல்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: