Followers

Friday, February 20, 2015

கோவில் தரிசனம்


வணக்கம்!
         நேற்று மதியம் ஆலங்குடி குருஸ்தலம் செல்லலாம் என்று முடிவு எடுத்து கிளம்பினேன். என்னோடு வந்த நண்பர் முதலில் நாம் பட்டீஸ்வரம் சென்று வரலாம் அதன் பிறகு வரும் வழியில் ஆலங்குடி குரு ஸ்தலம் தரிசனம் செய்யலாம் என்று சொன்னார். அப்படியே செய்வோம் என்று கிளம்பினோம்.

பட்டீஸ்வரம் மாலை ஐந்து மணியளவில் கோவிலை அடைந்தேன். சிவன் தேனுபுரீஸ்வராக இருக்கிறார். அம்மன் ஞானாம்பிகையாக இருக்கிறாள். உள்ளே நாங்கள் செல்வதற்க்கும் மாலை பூஜை துவங்கியது. முதலில் தேனுபுரீஸ்வரை தரிசனம் செய்துவிட்டு பிறகு ஞானாம்பிகையை தரிசனம் செய்தோம். 

இந்த தலத்தில் உள்ள சிறப்பு என்ன என்றால் துர்கை அம்மன் தான். துர்கையின் தலைமை இடம் இந்த தலம் என்று சொல்லுவார்கள். துர்க்கை அம்மனுக்கு அதிகமுக்கியதுவம் கொடுத்து இருக்கிறார்கள். துர்க்கை அம்மனை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

பொதுவாக தஞ்சாவூர் பகுதியில் உள்ள கோவில்களை பார்த்தால் கோவில்களின் வாசற்படியில் இருந்து கோவிலின் மூலவரை தரிசனம் செய்வதற்க்கு ஒரு கிலோ மீட்டர் நடக்கவேண்டியிருக்கும். அவ்வளவு பிரமாண்டாமாக கட்டி வைத்திருப்பார்கள். அப்படியே கல்லால் செதுக்கி வைத்திருப்பார்கள்.

இந்த கோவில்கள் எல்லாம் புராணக்காலத்து கதைகளோடு சம்பந்தப்பட்டு இருக்கும். மிக பழமையான கோவில்களாக இருக்கும். இப்படிப்பட்ட கோவில்களுக்குள் நாம் உள்ளுக்குள் செல்லும்பொழுது நமது பூர்வபுண்ணியத்தோடு சம்பந்தப்பட்ட கோவிலாக நமக்குள் உள்ளூணர்வு ஒன்று ஏற்படும்.

எத்தனையோ கோடி மக்கள் தரிசனம் செய்த கோவில்களை நாம் தரிசனம் செய்யும்பொழுது நமது ஆத்மா மிகவும் தூய்மையானதாக இருக்கும் நமது கர்மாவும் நம்மை விட்டு செல்லும். தஞ்சாவூர் பகுதிக்கு நீங்கள் வரும்பொழுது இந்த பட்டீஸ்வரத்திற்க்கும் சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு



No comments: