Followers

Monday, February 23, 2015

கேள்வி & பதில்


வணக்கம்!
         சிவபூஜையைப்பற்றி எழுதியிருந்தேன். அதனைப்பற்றி ஒரு சில கேள்விகள் வந்தன.

சிவபூஜையை பெண்கள் செய்யலாமா என்று ஒரு கேள்வி வந்தது.

பெண்கள் சிவபூஜையை செய்யலாம். திருமணம் முடிந்த பெண்களாக இருந்தால் செய்யுங்கள். திருமணம் ஆகாத பெண்களாக இருந்தால் சிவபூஜையில் பங்குக்கொள்ளுங்கள் அபிஷேகம் செய்யவேண்டாம். திருமணம் முடியாத பெண்கள் சிவபூஜை செய்யும்பொழுது அப்படியே அதில் ஈர்க்கப்பட்டு திருமணம் வேண்டாம் என்று சென்றுவிடுவார்கள்.

தினந்தோறும் சிவபூஜை செய்யலாமா என்று கேள்வி வந்தது.

உங்களிடம் வசதி வாய்ப்பு இருந்தால் நீங்கள் தினந்தோறும் செய்யுங்கள். உங்களுக்கு நேரம் இருந்தால் செய்யலாம்.

எந்த நாளில் செய்யலாம் என்று கேள்வி வந்தது.

சிவனுக்குரிய நாட்களில் நீங்கள் செய்யலாம். பிரதோஷம் மற்றும் சிவராத்திரி அமாவாசை பெளர்ணமி என்று வரும் நாட்களிலும் செய்யலாம். உங்களுக்கு பிடித்தமான நாட்களிலும் சிவபூஜை செய்துக்கொள்ளுங்கள்.

மாலை நேரத்தில் அடுத்த பதிவு.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: