Followers

Wednesday, February 25, 2015

பிரசாதம்


வணக்கம்!
          ஒவ்வொரு கோவிலுக்கும் செல்லும்பொழுது ஒவ்வொரு விதமான நடைமுறை இருக்கும். வழிப்பாட்டு முறை பூஜை முறை அனைத்திலும் வித்தியாசம் இருக்கும். 

இந்த முறை மருதமலை முருகனின் கோவிலுக்கு செல்லும்பொழுது என்னுடன் வந்த நண்பர்களிடம் நான் பஞ்சாமிர்தம் வாங்குவோம் என்று வாங்கி அதனை சாப்பிட்டேன். முருகனின் கோவிலில் பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்படவேண்டும். நாம் கோவில்களில் பிரசாதம் காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலை இருக்கிறது.

நீங்கள் எந்த ஒரு வழிபாடு அல்லது பூஜை செய்தாலும் நிறைவாக நீங்கள் ஏதாவது ஒரு உணவை உண்ணவேண்டும். அதற்கு தான் பிரசாதம் கொடுப்பார்கள். பெருமாள் கோவில் என்றால் துளசி தீர்த்தம் கொடுப்பார்கள். ஒவ்வொரு கோவிலுக்கும் இப்படி வித்தியாசமான தீர்த்தம் அல்லது பிரசாதம் கொடுப்பார்கள். 

முருகன் கோவிலில் நீங்கள் வழிபாட்டை முடிப்பதாக இருந்தால் கடைசியில் பஞ்சாமிர்த்தை சாப்பிட்டுவிட்டு வழிபாட்டை முடிக்கவேண்டும். அம்மன் கோவிலாக இருந்தால் வேப்பிலை கொடுப்பார்கள். சிவன் கோவிலாக இருந்தால் விபூதியை கொடுப்பார்கள்.

நாம் இறைவனின் சந்நிதானத்தில் எடுத்த சக்தி நமது உடலில் அப்படியே தங்கவேண்டும் என்பதற்க்காக இப்படிப்பட்ட பிரசாதத்தை அருந்தவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: