Followers

Tuesday, March 24, 2015

காடுகள்


வணக்கம்!
          ஆன்மீகப்பயிற்சி செய்வதற்க்கு காடுகளை தேர்ந்தெடுத்து அங்கு ஆன்மீகப்பயிற்சியை கொடுப்பார்கள். ஒரு சிலர் கோவில்களை தேர்ந்தெடுத்து அங்கு ஆன்மீகப்பயிற்சி கொடுப்பார்கள்.

வனத்தில் ஆன்மீகப்பயிற்சி செய்வது என்பது மிகப்பெரிய அளவில் அது பயன்தரும் என்பதற்க்காக அதிகப்பட்சம் காடுகளை ஆன்மீககுருக்கள் தேர்ந்தெடுப்பார்கள். நான் கூட காடுகளில் ஆன்மீகப்பயிற்சி செய்தது உண்டு.

இந்தியா ஆன்மீகப்பயிற்சி செய்தர்க்கு ஏற்ற நாடு என்று சொல்லுவது எல்லாம் கூட இந்தியாவில் இருக்கும் காடுகளை நம்பி தான் சொல்லுவார்கள். இன்றைய காலத்தில் காடுகளில் ஆன்மீகப்பயிற்சி செய்வது என்பது கடினமான ஒன்றாகவே மாறிவிட்டது.

காடுகள் முழுவதும் மனிதன் நாசம் செய்ய தொடங்கிவிட்டான் என்று சொல்லலாம். காடுகளை அழிப்பது அல்லது காடுகளில் இருந்து தேசவிரோத செயல்களில் ஈடுபடுவது எல்லாம் காடுகளில் தான் நடைபெறுவது என்பதால் இருக்கும் காடுகளில் மிகப்பெரிய அளவில் பாதுகாப்பை ஏற்படுத்திவிட்டார்கள்.

ஒரு வாரத்திற்க்கு முன்பு கூட ஆந்திரா அரசு அறிக்கை வெளியிட்டது என்று பேப்பரில் பார்த்தேன். காடுகளுக்குள் யாராவது சென்றால் சுடலாம் என்ற உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளியானது.

ஒவ்வொரு காடுகளுக்கும் செல்லுவது என்பது மிகப்பெரிய கஷ்டம். அந்தளவுக்கு பாதுகாப்பை வனத்துறையினரால் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. காடுகளின் தன்மை எல்லாம் சென்று இன்று மனிதன் வாசம் புரியும் இடமாகவே மாறிவிட்டது. நான் சென்ற காலத்தில் உள்ள காடுகள் எல்லாம் இன்று மாறிவிட்டது. அதன் இயற்கை தன்மை போய்விட்டது என்றே சொல்லலாம்.

தற்பொழுது இருக்கின்ற காலகட்டத்திலேயே நீங்கள் சென்று வந்துவிடுங்கள். எதிர்காலத்தில் எப்படி மாறும் என்று சொல்லமுடியாது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: