Followers

Friday, April 17, 2015

நல்லெண்ணெய் முறித்தல்


வணக்கம்!
          நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதைப்பற்றி நான் ஏற்கனவே சொல்லிருக்கிறேன். ஒரு சிலருக்கு இந்த நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கும்பொழுது அவர்களின் உடலுக்கு ஏற்றுக்கொள்வதில்லை. நீர்கோர்வை அல்லது தலைபாரம் ஏற்படுவது உண்டு.

பல நண்பர்கள் நல்லெண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு எனக்கு அன்று முழுவதும் தலைவலி இருந்தது என்று சொல்லியுள்ளார்கள். இது ஏன் ஏற்படுகிறது என்றால் இதுவரை தேய்த்து குளிக்காமல் இருந்துவிட்டு திடீர் என்று குளிக்கும்பொழுது இப்படி ஏற்படுவது உண்டு.

நல்லெண்ணெய்யின் இயற்கை தன்மையின் வேகம் அதிகமாக இருக்கும்பொழுது இப்படி ஏற்படுவது உண்டு. கிராமங்களில் நல்லெண்ணெயை முறித்துவிட்டு அதன் பிறகு தேய்த்து குளிப்பார்கள்.

வாணலியில் எண்ணெயை ஊற்றி அதில் பூண்டு மிளகாய் வேப்பிலை  போட்டு கொஞ்சம் சூடு ஏற்றினால் அந்த நல்லெண்ணெய் முறிந்துவிடும். அதனை அடுப்பில் இருந்து இறக்கி மிதமான சூட்டில் தலையில் தேய்த்து குளித்தால் மேலை சொன்ன பிரச்சினை வராது. மிளகாயை பிய்த்து போடாமல் முழு மிளகாயாக போடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: