Followers

Friday, April 17, 2015

ஆன்மீகம்


வணக்கம்!
          இன்றைய காலத்தில் ஆன்மீகம் அதிகமான வளர்ச்சி அடைந்துள்ளது. ஆன்மீகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று பொதுவாக அனைவரும் நினைக்கின்றனர். ஒவ்வொரு ஆன்மீகவாதியிடமும் சென்றுக்கொண்டே இருக்கின்றனர்.

ஆன்மீகத்திற்க்கு என்று இது தான் வரைமுறை என்று ஒவ்வொரு ஆன்மீகவாதியும் விதிமுறையை வைத்துக்கொண்டு ஆன்மீகத்தை கற்றுக்கொடுத்து வருகின்றனர். பல பேர்கள் இந்த விதிமுறையை பார்த்தே ஆன்மீகம் வேண்டாம் என்று ஒதுங்கிவிடுகின்றனர்.

எனக்கு தெரிந்த ஒரு நண்பர் என்னிடம் சொன்னார். ஆன்மீகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றால் காலையில் நான்கு மணிக்கு எல்லாம் எழுந்துவிட வேண்டும் என்று சொன்னார்கள். விடியற்காலையில் நான்கு மணிக்கு எல்லாம் யாரால் எழுந்திருக்கமுடியும் அதனால் நான் அதற்கு வரவில்லை என்று சொன்னார்.

ஒரு நல்ல குருவிடம் நீங்கள் சென்றால் அந்த குரு நீங்கள் எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும் எந்த வித கட்டளையும் இல்லாமல் உங்களை மிக உயர்ந்த ஒரு இடத்திற்க்கு உங்களை கொண்டு செல்வார். 

நாம் இந்த தவறு செய்திருக்கிறோம் அந்த தவறு செய்திருக்கிறோம் என்பதைப்பற்றி எல்லாம் கவலையில்லை. அவர் அனைத்தையும் பார்த்துக்கொள்வார். உங்களை மிக உயர்ந்த ஒரு நிலையை அந்த குரு செய்து தருவார். இது என் அனுபவத்தில் கண்ட உண்மை.

இன்று மதியம் கோயம்புத்தூர் பயணம். பதிவுகள் வழக்கம்போல் வரும் பதிவுகள் தானாகவே வருவதுபோல் செய்துவிட்டு செல்லுகிறேன் தினமும் வந்து படியுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: