Followers

Tuesday, June 30, 2015

சோதிட அனுபவம்


ணக்கம்!
          என்னிடம் ஒரு நண்பரின் ஆலோசனையில் ஒரு சினிமா தயாரிப்பாளர் ஒருவர் வந்து சந்தித்தார். நானும் அவரின் ஜாதகத்தை பார்த்தேன். அவரின் ஜாதகத்தில் சுக்கிரன் பனிரெண்டாவது வீட்டில் இருந்தது. விரைய வீட்டில் சுக்கிரன் இருந்தது. என்னை அவர் சந்தித்த நோக்கம் படம் எடுக்கும்பொழுது ஏதோ பிரச்சினை என்று சொன்னார். அந்த நேரத்தில் அம்மனை வைத்து அந்த பிரச்சினையை நீக்கிவிட்டேன். படம் எடுத்துவிட்டதாக சொன்னார். அதன் பிறகு அவர் என்னை சந்திக்கவில்லை. 

பொதுவாகவே எனது சுபாவம் அடுத்தவர்களை அவ்வளவு எளிதில் நம்புவது கிடையாது. அதுவும் ஆன்மீக வேலையில் பணம் வாங்காமல் சுத்தமாக செய்வதில்லை என்றே சொல்லாம். சினிமா சம்பந்தப்பட்டவர்கள் அரசியல் சம்பந்தப்பட்டவர்களுக்கு நான் எதுவும் செய்வதில்லை. நண்பரின் உதவியால் வந்தவர் என்று செய்தேன்.

விரைய வீட்டில் சுக்கிரன் இருக்கிறது. எந்த கிரகம் விரைய வீட்டில் இருக்கின்றதோ அந்த வீட்டின் காரத்துவம் சம்பந்தப்பட்ட வேலையில் நாம் இறங்ககூடாது. அப்படி அந்த வீட்டின் காரத்துவம் சம்பந்தப்பட்ட வேலையில் இறங்கும்பொழுது அதற்கு தகுந்த ஏற்பாடு செய்து இறங்கவேண்டும்.

தயாரிப்பாளர் படம் எடுத்தாரே தவிர அந்த படம் இன்று வரை வெளியில் வரவில்லை என்றே நினைக்கிறேன். படம் வந்தாக எனக்கும் தெரியவில்லை.சுக்கிரன் பனிரெண்டில் இருந்து அவரின் பணத்தை எல்லாம் படம் எடுக்கவைத்து சிக்க வைத்துவிட்டது. பனிரெண்டாவது வீட்டில் இருக்கும் கிரகம் அதன் காரத்துவம் சம்பந்தப்பட்ட தொழில் இறங்கவைத்து சிக்க வைத்துவிடும்.

எனது ஊருக்கு அருகில் ஒரு நண்பரின் ஜாதகத்தில் பனிரெண்டாவது வீட்டில் சனிக்கிரம் இருந்தது. அவர் பல தொழில் செய்துவந்தார் அவர் எந்த தொழில் செய்தாலும் அதில் அவர் தோல்வியை சந்திப்பார். எந்த தொழிலும் அவருக்கு சரியில்லை. 

கடைசியில் அவரிடம் நான் சொன்னது இருக்கின்ற தொழிலை மூடிவிட்டு எங்காவது ஒரு வேலையில் சேர்ந்துவிடு என்றேன். தற்பொழுது அவர் வேலையில் சேர்ந்துவிட்டார். சனிக்கிரகம் பனிரெண்டில் இருந்தால் ஒரு நிரந்தரமான தொழில் அமையாது. ஏதாவது சனி நன்றாக இருக்கும்பொழுது ஒரு தொழில் அமைந்தாலும் அந்த தொழில் அதிக நாட்கள் நீடிக்காது. ஏதோ என்று தொழில் இருக்கும்.

விரைய வீட்டில் அமரும் கிரகத்தின் காரத்துவம் உடைய வேலையை தேர்ந்தெடுக்காதீர்கள். அப்படியே தேர்ந்தெடுத்தால் அதற்கு தகுந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: