Followers

Wednesday, July 1, 2015

நிலவும் மனதும்


ணக்கம்!
          தற்பொழுது பெளர்ணமி நிலவை பார்த்துக்கொண்டு இந்த பதிவை உங்களுக்கு தருகிறேன். பெளர்ணமி அன்று ஏதாவது ஒரு கோவிலுக்கு செல்லவேண்டும் என்பது ஒரு கடமையாக வைத்திருந்தால் நமக்கு தேவையான நல்வாழ்வை இறைவன் அருள்வான்.

நமது சோதிடத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது சந்திரன். மனக்காரகன் சந்திரன் நன்றாக இருந்தால் நாம் சிந்திப்பது அனைத்தும் நல்லவையாக இருக்கும். 

சந்திரன் உங்களின் ராசியில் கெடுதலாக அமர்ந்து இருக்கிறது என்று உங்களுக்கு தெரிந்தால் அதற்கு தகுந்த பரிகாரத்தை எடுக்கவேண்டும். மனது சரியில்லை என்றால் நாம் எடுக்கும் எந்த ஒரு முடிவும் சரியாக அமையாது. முடிவு எடுக்கும் மனநிலையும் நமக்கு உருவாகாது.

மனது பிரச்சினை என்று சொல்லுபவர்கள் அனைவரும் வளர்பிறை முழுவதும் வாசலில் அமர்ந்து வானில் தெரியும் சந்திரனை பார்த்து ரசித்தாலே போதும்.

பெளர்ணமி அன்று முழுவதும் சந்திரனை குறைந்தது மூன்று மணி நேரம் பார்த்து ரசித்தால் நமது மனது சுத்தமாகிவிடும். வாசலில் அல்லது மாெட்டை மாடியில் அமர்ந்து ஜாலியாக ரசித்து பார்த்தால் போதும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: