Followers

Saturday, October 31, 2015

பொறுமை


ணக்கம்!
         இரண்டு நாட்களாக வேலை அதிகம் இருந்த காரணத்தால் உங்களுக்கு பதிவை தரமுடியவில்லை. வெற்றி அடைந்த ஒவ்வொருரின் குணத்தையும் பார்க்கும்பொழுது அவர்களுக்கு அதிகமான பொறுமை இருந்து இருக்கின்றது. நீண்ட நாட்கள் இதற்காகவே காத்துக்கொண்டு இருந்திருக்கிறார்கள். 

நமது ஆத்மாவில் படிந்துள்ள விசயத்தை தான் நாம் எதிர்நோக்கி செல்கிறோம் அப்படி ஆத்மாவில் படிந்த ஒரு விசயத்தை எதிர்நோக்கும்பொழுது பொறுமையாக அதனை நாம் கையாண்டால் கண்டிப்பாக நமக்கு வெற்றி கிடைத்துவிடும்.

ஒருவருக்கு ஏதோ ஒரு துறையில் முன்னேற்றம் ஏற்படவேண்டும் என்று நினைத்து அதற்கு வேலை செய்துக்கொண்டு இருக்கிறார் என்றால் அந்த துறையில் அவருக்கு பொறுமை இருந்திருந்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்.

பூர்வபுண்ணியம் இந்த துறை என்பதை உங்களுக்கு கொடுத்துவிட்டது. பெற்ற துறையில் இருந்து வெற்றி பெறுவதற்க்கு பாக்கியஸ்தானம் கொடுக்கவேண்டும். பொறுமையாக அதனை நாம் பிடித்துக்கொண்டே இருந்திருந்தால் கண்டிப்பாக நமக்கு வெற்றி கிடைத்துவிடும்.

ஒரு சிலர் வயது அதிகம் இருந்தால் கூட அவர்களால் பொறுமையாக இருக்கமுடிவதில்லை. ஏதாவது அவசரப்பட்டு செய்து சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள் இதுவும் அவர்களுக்கு கொடுத்த பாக்கியம் தான் என்று சொல்லவேண்டும்.

ஒரு சிலருக்கு பாக்கியஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்திருக்கும் அந்த நபர்கள் பொறுமையிழந்து வெற்றி பெறுவதில்லை. எடுத்தோம் கவிழ்த்தோம் என்பது போல் நடப்பார்கள்.

உங்களின் ஜாதகத்தில் எந்த கிரகம் அமர்ந்திருந்தாலும் நீங்கள் கொஞ்சம் பொறுமையாக அமைதி காக்கும்பொழுது உங்களுக்கு கண்டிப்பாக வெற்றி கிடைத்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, October 28, 2015

பாக்கியஸ்தானத்தை பலப்படுத்த


வணக்கம்!
          பாக்கியஸ்தானத்தில் சொல்லப்படும் கருத்துக்கள் பொதுவாகவே ஆன்மீக சம்பந்தப்பட்ட காரியங்களாக இருக்கும். ஆன்மீகசம்பந்தப்பட்ட காரியங்கள் எதனை வேண்டுமானாலும் நீங்கள் செய்து பாக்கியஸ்தானத்தை பலப்படுத்திக்கொள்ளலாம்.

என்னிடம் வந்து தான் இதற்கு தீர்வு காணவேண்டும் என்பதில்லை என்னிடம் வந்தால் பணம் கேட்பேன். உங்களால் முடிந்தளவு ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு இந்த வீட்டை பலப்படுத்திக்கொள்ளமுடியும் என்று பல பதிவுகளில் சொல்லிவருகிறேன். ஆன்மீகத்தில் ஒவ்வாெருவருக்கும் ஒவ்வொரு மார்க்கம் இருக்கும் அந்த மார்க்கத்தில் கடைபிடித்து செய்துக்கொள்ளலாம்.

ஒரு முஸ்லீம் இதனை படித்துவிட்டு பாக்கியஸ்தானத்தை பலப்படுத்த வேண்டும் என்று அவர் நினைக்கிறார் என்றால் அவரின் மார்க்கத்தில் ஆன்மீக வழியில் என்ன சொல்லியுள்ளார்களோ அதனை செய்துக்கொள்ளலாம். 

ஆன்மீகவழியில் செய்யமுடியாது எனக்கு ஆன்மீகம் பிடிக்காது என்று நினைப்பவர்கள் தாராளமாக மக்களுக்கு சேவை செய்யலாம். மக்களுக்கு சேவை செய்து அவர் நல்லதை பெறலாம். சும்மா இருப்பதை விட ஏதோ நல்லதை செய்யலாம்.

ஒரு சிலருக்கு இது எதுவும் செய்யாமல் கூட நல்லது நடக்கும். அது அவர் பெற்ற பாக்கியம் என்று இருக்கவேண்டியது தான். எதுவும் நடக்கவில்லை என்று இருப்பவர்கள் செய்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, October 27, 2015

பாக்கியஸ்தானம்


வணக்கம்!
          பாக்கியஸ்தானம் எந்தளவுக்கு பயன்படுகிறது என்பதை நான் என்னுடைய அனுபவத்தில் பலருக்கு பார்த்து இருக்கிறேன். தொழில் செய்பவர்கள் வரும்பொழுது அவர்களுக்கு நிறைய பரிகாரம் செய்வது உண்டு. பரிகாரம் செய்யும் நேரத்தில் பூர்வபுண்ணிய வீடும் பாக்கியஸ்தானமும் தான் அதிகம் எங்களுக்கு தேவைப்படும்.

முன் செய்த புண்ணியம் எல்லாம் எந்த ஜென்மத்தில் வருகின்றது என்பது தெரியாது. இந்த ஜென்மத்திலேயே அனைத்தும் வந்துவிடாது. ஒருவர் ஆசைப்பட்டு எனக்கு இப்படி வேண்டும் அல்லது இப்படிப்பட்ட வாழ்க்கை அமையவேண்டும் என்று கேட்கும்பொழுது அவர்களின் பூர்வபுண்ணிய கணக்கில் என்ன இருக்கின்றது என்பதை பார்த்து அதில் இருந்து தான் எடுத்து இந்த வாழ்க்கைக்கு சரி செய்வோம்.

சூட்சம வேலை தான் இது எல்லாம். எந்த வேலையாக இருந்தாலும் அது ஜாதகத்தை வைத்து செய்யப்படும்பொழுது நல்ல நிரந்தர தீர்வாக அமையும். பாக்கியஸ்தானம் மிக மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஜாதகத்தை வைத்து பாக்கியஸ்தானம் கொடுப்பது போல் செய்வது தான் அதிகம் நடக்கும்.

ஒருவர் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றார் என்றால் அவர் முன்ஜென்மத்தில் பாவம் மட்டும் தான் செய்துக்கொண்டிருப்பார் என்பது இல்லை. முன்ஜென்மத்தில் நல்லதும் செய்து இருப்பார். இந்த ஜென்மத்திற்க்கு ஏதாவது ஒரு காரணத்திற்க்காக வராமல் இருக்கும். அதற்கு நாம் வழி செய்துவிட்டால் மிக உயர்ந்த வாழ்க்கையை வாழமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, October 26, 2015

பெளர்ணமி


ணக்கம்!
          அன்றாடம் ஏதாவது ஒரு ரூபத்தில் பிரச்சினை நம்மை துரத்திக்கொண்டே இருக்கும். பிரச்சினை இல்லாமல் வாழ்க்கை செல்லுகின்றது என்றால் அது மிக குறைந்த அளவில் உள்ளவர்களுக்கே என்று சொல்லிவிடலாம்.

பிரச்சினை தினமும் வந்துக்கொண்டே இருக்கின்றது அதில் இருந்து மீள்வதற்க்கு தினமும் ஐந்து வேளை தொழுவுங்கள் என்று சொன்னால் நீங்கள் கேட்பீர்களா மாதத்திற்க்கு ஒரு முறையாவது அல்லது இருமுறை வணங்கினால் போதும் என்று தான் நினைப்பீர்கள்.

ஒரு சிலர் வருடத்திற்க்கு ஒரு முறை கடவுளை வணங்கினால் பாேதும் என்று கூட நினைப்பார்கள். மனிதன் அவ்வளவு சோம்பேறியாக மாறிவிட்டான். வணங்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நேரம் இல்லை என்று சொல்லிவிடுவார்கள்.

ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி அன்று ஏதோ ஒரு வழிபாட்டை செய்து வந்தால் போதும். ஒன்று குலதெய்வத்திற்க்கு பச்சைப்பரப்புதல் செய்து வாருங்கள் அல்லது பெளர்ணமி அன்று கிரிவலம் செய்து வாருங்கள்.

கிரிவலம் செல்ல திருவண்ணாமலை மட்டும் தான் செல்லவேண்டும் என்பதில்லை உங்களின் ஊரில் உள்ள சிவலாயத்திலேயே இதனை செய்யலாம். உங்களின் குலதெய்வத்தின் கோவிலுக்கு சென்று வரலாம். பெளர்ணமி அன்று வீட்டில் குலதெய்வத்திற்க்கு பச்சை பரப்புதலை செய்து வந்தால் உங்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட்டுவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, October 25, 2015

அன்னாபிஷேகம்


ணக்கம்!
          உலகத்திற்க்கு உள்ள ஜீவராசிகளுக்கு எல்லாம் சிவன் உணவை படைத்த நாளாக ஐப்பசி பெளர்ணமியை சொல்லுவார்கள். உலகத்தில் உள்ள உயிர்களுக்கு கருணை வடிவமான சிவன் உணவை படைத்த நாளில் சிவன் கோவிலில் உள்ள லிங்கத்திற்க்கு அன்னாபிஷேகம் செய்வார்கள். அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் விழா தான் அன்னாபிஷேகம்.

அன்னாபிஷேகம் நடைபெறும் சிவன் கோவிலுக்கு நம்மால் முடிந்த ஒரு சிறிய உதவியாவது செய்யும்பொழுது அந்த சிவன் மகிழ்ந்து நமக்கு நல்ல அருளை தருவார். அன்னாபிஷேகத்திற்க்கு அரிசி காய்கறி என்று வாங்கிக்கொடுக்கலாம். இதனை வாங்கிக்கொடுக்கமுடியவில்லை என்றாலும் பணஉதவியை செய்து தரலாம்.

அன்னாபிஷேகத்தன்று எம்பெருமானின் மேனியிலே சாற்றப்படுகின்ற ஒவ்வொரு பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம் என்பார்கள், எனவே அன்று சிவதரிசனம் செய்தால் கோடி சிவதரிசனம் செய்வதற்கு சமம். 

நாம் கொடுக்கின்ற அரிசி பல சிவலிங்கங்களாக உருவாகின்றது. கடவுளை உணவாக உண்கிறான் என்று ஒரு சிலர் சொல்லுவார்கள். அது எல்லாம் நம்ம மதத்தில் தான் இருக்கின்றது செயலிலும் நடைபெறுகின்றது. அன்னத்தை இரண்டாம் காலபூஜை (8:30 pm) முடிந்தபிறகு பக்தர்களுக்கு கொடுப்பார்கள். பக்தர்களுக்கு மட்டும் இல்லை அதனை நீர் நிலைகள் உள்ள இடங்களுக்கும் சென்று உயிரினங்களுக்கு கொடுப்பார்கள்.

27/10/2015  செவ்வாய்கிழமை சிவன் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. அதற்கு உங்களின் பங்களிப்பை உங்களுக்கு அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்கு செலுத்துங்கள் அல்லது மாலை நேரத்தில் சிவன் காேவிலுக்கு சென்று அன்னாபிஷேகத்தில் இருக்கும் ஆண்டவரை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். கோவில் பக்கமே செல்லாதவர்கள் கூட ஒரு முறை சென்று தரிசனம் செய்து பாருங்கள்.

வருடத்திற்க்கு ஒரு முறை மட்டுமே அன்னாபிஷேகத்தில் சிவனை தரிசனம் செய்ய முடியும். வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பரிகாரம்


வணக்கம்!
          சோதிடர்களை தேடி வருகின்றார்கள் என்றால் சும்மா வருவதில்லை. ஏதோ ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொண்டு அதில் இருந்து மீண்டு வருவதற்க்கு தான் வருகின்றார்கள். நான் பழைய காலத்தில் ஏதாவது செய்வது போல் செய்வார் என்றும் பல நண்பர்கள் என்னை அணுகுவது உண்டு.

இன்றைய காலத்தில் நாம் ஏதாவது செய்துவிட்டு பிறகு பணத்தை வாங்கிக்கொள்ளலாம் என்று நினைத்தால் ஏமாறுவது நானாக தான் இருக்கும். அவர்கள் பணம் தரவேண்டும் என்று தான் நினைக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு கொடுப்பதற்க்கு நேரம் இருப்பதில்லை.

கடன்பட்டவர்களுக்கு கடனை அடைக்க நான் வழி செய்து கொடுத்தால் அவர்கள் சொல்லுவது நான் வாங்கிய பணத்தை எல்லாம் கடனுக்கே கொடுத்துவிட்டேன். உங்களுக்கு பிறகு தருகிறேன் என்று சொல்லுவார்கள். 

ஒரு சிலரிடம் அன்றைய தேதிக்கு அன்றாட செலவுக்கு கூட இல்லாமல் என்னை சந்திப்பவர்கள் உண்டு. இந்த நிலைமையில் நீங்கள் செய்யவேண்டியது கோவிலாக பார்த்து அலைந்து அதில் இருந்து மீண்டு வாருங்கள் என்பதை சொல்லிவிடுவேன் அந்த நிலையில் இருந்து மீண்டு வருவதற்க்கு கோவிலுக்கு சென்று வழிபடுவதை தவிர வேறு வழி இருக்கமுடியாது.

பணம் இல்லாமல் பணத்தை சம்பாதிப்பது என்பது கடினமான ஒன்று. பணத்தை கொடுத்து தான் பரிகாரம் செய்யமுடியும். தொழில் செய்பவர்களுக்கு எல்லாம் இலவசமாக செய்துக்கொடுக்கிறார் என்று பல பேர் நானும் தொழில் செய்கிறேன் என்று வந்தார்கள். நான் ஒன்றுமே செய்யவில்லை. பணம் இல்லாமல் ஒருபோதும் பரிகாரம் செய்வதில்லை.

நீங்கள் ஒரு பரிகாரத்திற்க்கு கொடுக்கின்ற பணத்தில் முக்கால்வாசி நான் பாக்கியஸ்தானம் சொல்லும் இடத்திற்க்கு கொடுத்தால் மட்டுமே பரிகாரம் செய்யமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, October 24, 2015

சாபம்


ணக்கம்!
          ஒரு சிலருக்கு விதியோ என்னவே அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியாமல் செய்து அவர்கள் சாபத்தில் மாட்டிக்கொள்வார்கள்.

அனுபவத்தில் நடந்தது ஒன்றை சொல்லுகிறேன். ஒரு ஊரில் சோதிடம் பார்க்க தெருவில் சென்ற ஒரு சாமியாரை கூப்பிட்டு பார்த்தார்கள். அவர் சோதிடம் சொல்லும்பொழுது ஏதோ பிரச்சினை ஏற்பட்டு அவரை போட்டு அந்த நபர் அடித்துவிட்டார்.

ஒரு சில இடத்தில் விதி இப்படி ஒரு ஏற்பாட்டை செய்துவிடும். அதில் மாட்டிக்கொண்டு அதன் படி நடக்க ஆரம்பித்துவிடும். அடிப்பட்ட சாமியார் சாபத்தை விட்டுவிட்டு சென்றுவிட்டார். இனிமேல் உங்களுக்கு வாரிசு என்பது அமையாது என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

சம்பந்தப்பட்ட பையனுக்கு திருமண செய்து வைத்தார்கள். அந்த பையனுக்கு குழந்தை பாக்கியம் என்பது இல்லாமல் சென்றுவிட்டது. சாமியாரை தேடி எங்குபோவது. வழிபோக்கான சாமியார். அவரை கண்டிபிடித்து என்ன செய்யமுடியும். விதியை நொந்துக்கொள்ளவதை தவிர வேறு எதுவும் செய்யமுடியாது.

நம்ம ஆளுங்க இப்படி தான் செய்வார்கள். அதுவும் கிராமபுறங்களில் கொஞ்சம் ஓவராகவே இது இருக்கும். அதாவது கோவில் கோவிலாக சென்று கொண்டு எதுவும் வேண்டாம் என்று கடவுள் நாமத்தையை சொல்லிக்கொண்டு திரிபவர்களிடம் எதற்கு சண்டை சச்சரவு செய்யவேண்டும். அப்படிப்பட்டவர்களிடமும் சண்டை போடவேண்டும் என்று தோன்றுகிறதை விதி என்று தான் சொல்லவேண்டும்.

ஒரு சிலருக்கு பாக்கியஸ்தானம் கெட்டால் இப்படி தான் நடைபெறும். எங்கு ஆன்மீகசம்பந்தப்ப்பட்டவர்கள் இருக்கின்றார்களே அவர்களை தேடிச்சென்று வம்பு இழுப்பார்கள். அவர்களின் சாபத்தை வாங்கி வைத்துக்கொண்டு பிறகு வாழ்க்கையில் கஷ்டப்படுவது ஏன்? 

புராணக்காலத்தில் இருந்தே இது நடைபெற்றுக்கொண்டு இருக்கின்ற ஒரு செயல். எத்தனையோ முனிவர்கள் சாபம் விட்டார்கள் என்று படித்திருப்பீர்கள் அது எல்லாம் இப்படி தான். பாக்கியஸ்தானத்தில் ஏற்படும் பிழைகள் தான் இதுபோல் நடப்பது.

சென்னைக்கு வருவதாக பயண ஏற்பாடு இருக்கின்றது. சந்திக்க விருப்பம் இருக்கும் நபர்கள் தொடர்புக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, October 23, 2015

பாக்கியஸ்தானம்


ணக்கம்!
          பாக்கியஸ்தானத்தைப்பற்றி பார்த்து வருகிறோம். ஒரு சில குடும்பங்களில் தந்தை ஸ்தானத்தில் இருக்கும் நபர் சரியாக தன் கடமையை செய்வார். ஒரு சில குடுபங்களில் தந்தையார் எதுவும் செய்யாமல் இருந்துவிடுவார்.

இன்றைய காலத்தில் தான தர்மம் செய்பவர்கள் எல்லாம் குறைவாக தான் இருப்பார்கள். முக்கால்வாசிபேர் கஷ்டப்படுவதற்க்கும் இது ஒரு காரணமாக தான் இருக்கும். நாம் ஒரு சிலரிடம் கடைசி வரை தான தர்மத்தை செய்துக்கொண்டே வந்துவிடுங்கள் என்று சொல்லுவது உண்டு.

தான தர்மம் செய்வது நமக்கு உடனே நல்லது நடக்கும் என்பது கிடையாது. நமக்கோ அல்லது நமது வாரிசுக்களுக்கோ நல்லது நடக்கும். என்னிடம் இருக்கும் தொழில் செய்யும் நண்பர்கள் அனைவருக்கும் பாக்கியஸ்தானத்திற்க்கு என்று அதிகம் செலவு செய்து அவர்களுக்கு நல்லதை நடக்க வைத்திருக்கிறேன். 

அம்மனை வைத்து நாங்கள் வேலை செய்தால் கூட இப்படிப்பட்ட நல்லதை செய்யும்பொழுது மட்டுமே மிக சரியாக அவர்களின் வாழ்க்கை செல்லும். நிரந்தர தீர்வும் அவர்களுக்கு ஏற்படும். அவர்களின் புண்ணிய கணக்கிற்க்கு வலு சேர்க்கும் விதமாக நாம் செய்யவேண்டும்.

ஒரு உண்மையை உங்களிடம் சொல்லுகிறேன். இன்றைய தேதியில் நான் வாங்கும் பணம். வாங்கிய பணம் எல்லாம் என்னிடம் இருந்தால் பல கோடிகள் இருந்திருக்கும். நான் வாழ்வது சாதாரணமான ஒரு வாழ்வு. இதுவரை வாங்கிய பணத்தை எல்லாம் சம்பந்தப்பட்ட நபர்களுக்காக தான தர்மம் மற்றும் ஆன்மீக பணியில் உள்ளவர்கள் என்று அதிகம் பாக்கியஸ்தானம் சம்பந்தப்பட்ட விசயத்திற்க்கே செலவு செய்து இருக்கிறேன். நம்மை தேடி வருபவர்கள் நிரந்தரமாக நன்றாக இருக்கவேண்டும் என்ற காரணத்தால் இப்படி செய்வது உண்டு.

பூர்வபுண்ணியம் என்பது நமக்கு கொடுத்துவிடும். பாக்கியஸ்தானம் கையெழுத்து போட்டால் தான் நாம் அதனை அனுபவிக்கமுடியும். பொதுவாக நாங்கள் அதிக பணம் வாங்கி செய்வது தற்பொழுது ஒருவர் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்க்காக அப்படி செய்வோம். நீங்கள் நன்றாக இருந்தீர்கள் என்றால் உங்களால் முடிந்த தான தர்மத்தை தொடர்ந்து செய்து வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, October 22, 2015

நல்வாழ்த்துக்கள்

ணக்கம்!
அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, October 21, 2015

பெரியாேர்களும் பாக்கியஸ்தானமும்


வணக்கம்!
         பாக்கியஸ்தானத்தை காட்டும் ஒன்பதாவது வீட்டைப்பற்றி பார்த்து வருகிறோம். இதில் ஒரு கருத்தைப்பற்றி பார்க்கலாம். ஒன்பதாவது வீடு ஒருவர்க்கு நன்றாக இருந்தால் அவர் பெரியாேர்களை நன்றாக மதிப்பார்.

இன்றைய காலத்தில் பெரியோர்களை மதிப்பது எல்லாம் நூற்றுக்கு பத்து பேர் இருக்கலாம். பெரியாேர்களை வீட்டிலேயே வைப்பது கூட கிடையாது அவர்களை வெளியில் தள்ளிவிட்டுவிடுகிறார்கள். திருமணம் முடிந்த கையோடு முதலில் செய்யும் வேலை அவர்களின் பெற்றோர்களை விட்டுவிட்டு நீ வந்துவிடு என்று தான் பெரும்பாலும் பெண்களின் கட்டளையாக இருக்கின்றது.

பாக்கியஸ்தானம் சொல்லும் சேதி உங்களை விட ஒரு நாள் மூத்தவர் என்றாலும் அவர்களை மதிக்கவேண்டும் என்று சொல்லுகின்றது. நம்மில் எத்தனை பேர் இப்படி மதிக்கின்றார்கள் என்று தெரியவில்லை ஆனால் நான் பெரும்பாலும் மதிப்பது உண்டு.

ஜாதககதம்பத்தில் இருந்து வரும் என்னை விட பெரியோர்களுக்கு தகுந்த மரியாதை கொடுப்பேன். ஏன் அவர்களை மதிக்கிறேன் என்றால் நம்மை விட இந்த பூமிக்கு முன் வந்தவர்கள் அவர்களின் அனுபவம் அதிகமாக இருக்கும் என்ற காரணத்தால் நான் மதிப்பது உண்டு. பாக்கியஸ்தானத்தைப்பற்றி எல்லாம் எனக்கு சோதிடத்தை பார்க்க ஆரம்பித்தபிறகு தான் தெரியும் ஆனால் என்னுடைய பழக்கமாக அதனை வைத்திருந்தேன்.

பெரியோர்களை மதித்தால் பாக்கியஸ்தானம் நன்றாக வேலை செய்யும் என்பதை நான் அனுபவரீதியாக பார்த்து இருக்கிறேன். இன்றைய காலத்தில் பெரியோர்களும் அதற்கு தகுந்தார்போல் நடப்பது இல்லை என்ற குற்றசாட்டையும் நான் ஏற்றுக்கொள்வேன். அவர்கள் வாழ்ந்த சூழ்நிலை மற்றும் பொதுவான பழக்கவழக்க அறிவு எல்லாம் அவர்களை சிறுபிள்ளைதனமாக நடத்தசொல்லுகிறது. பெரியோர்களை மதிக்காததற்க்கு பெரியோர்களும் ஒரு சில இடத்தில் காரணமாக அமைந்துவிடுகிறார்கள். இதனை தவிர்த்தால் நல்லது. 

நம்மைவிட ஒரு நிமிடம் முன்னர் பிறந்து இருந்தால் அவர்களை மதித்தால் பாக்கியஸ்தானம் நன்றாக பலம்பெறும். பாக்கியஸ்தானம் பலம்பெறும்பொழுது நமக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் அனைத்திலும் வெற்றி பெற்றுவிடலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ஆன்மீகப்பயிற்சி


ணக்கம்!
          நான் ஆன்மீக பயிற்சிக்கு புதிய கட்டண தளத்தை துவங்கியுள்ளது நீங்கள் அறிந்த ஒன்றே. இதில் பல்வேறு பயிற்சிகளை கொடுத்துக்கொண்டு வருகிறேன். அதில் இணைந்தவர்கள் அதனை செய்துக்கொண்டு வருகின்றனர்.

உங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை அந்த ஆன்மீகப்பயிற்சியை செய்தாலே போதும். அதில் கொடுத்துள்ள ஆன்மீகப்பயிற்சியை ஒருவர் செய்யும்பொழுது அவரிடம் இருக்கும் அனைத்து கர்மாவையும் எளிதில் எடுத்துவிடமுடியும். அந்த பயிற்சியை கொஞ்சநாட்கள் செய்யதாலே போதும் நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அந்த இடத்தை எளிதில் அடைந்துவிடமுடியும்.

நான் சொல்லும் ஆன்மீகப்பயிற்சியை செய்வதற்க்கு எந்தவித கட்டுபாடும் கிடையாது. நீங்கள் கொஞ்ச நேரம் ஒதுக்கினால் போதும் பயிற்சியை செய்துவிடமுடியும்.

இன்றைய பதிவில் மூன்றாவது கண்ணை எப்படி எளிதில் திறப்பது என்பதைப்பற்றி சொல்லியுள்ளேன். ஜாதககதம்பத்தில் நிறைய ஆன்மீக தேடுதல் உள்ளவர்கள் படித்துக்கொண்டு இருப்பீர்கள். உங்களின் ஆன்மீகத்தை மேம்படுத்திக்கொள்ள இந்த பயிற்சி மிகவும் உறுதுணையாக இருக்கும். 

கட்டண பதிவிற்க்கு உள்ள கட்டணத்தை செலுத்திவிட்டு அதில் உடனே இணைந்துக்கொண்டு உங்களின் ஆன்மீகப்பயிற்சியை செய்ய தொடங்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

நல்வாழ்த்துக்கள்

ணக்கம்!
 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

தான தர்மம்


ணக்கம்!
          ஒரு புத்தகத்தை படித்தபொழுது அதில் உள்ள ஒரு கதையை உங்களுக்கு தரவேண்டும் என்று நினைத்தேன். அதனை சொல்லவும் அதற்கு ஒரு சந்தர்ப்பம் இன்று அமைந்தது.

ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் பிறர்க்கு எந்த வித தான தர்மம் செய்யாமல் இருந்தான். அவனின் கனவில் மகாலட்சுமி கனவில் தோன்றி உன் முன்னோர்கள் செய்த புண்ணியத்தால் இன்று வரை செல்வந்தனாக இருந்துவந்தாய். நீ பிறர்க்கு தான தர்மம் செய்யவில்லை. நாளை உன்னை விட்டு சென்றுவிடுவேன். கடைசியாக உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேள் என்றது. 

மகாலட்சுமியிடம் பொன்னும் பொருளும் வேண்டும் என்று கேட்டான். மகாலட்சமியும் அவனுக்கு கொடுத்தது. அடுத்த நாள் மகாலட்சுமி அந்த வீட்டை விட்டு சென்றவுடன். பொன்னும் பொருளும் அவனை விட்டு சென்றது.

உங்களின் முன்னோர்கள் செய்த புண்ணியம் தான் உங்களுக்கு செல்வவளம் கிடைக்கிறது. அந்த புண்ணியம் கடைசி வரை தொடரவேண்டும் அதே நேரத்தில் உங்களின் வாரிசுயும் நன்றாக இருக்கவேண்டும் என்றால் நீங்களும் தொடர்ச்சியாக தான தர்மத்தை செய்து வரவேண்டும்.

ஒன்பதாவது வீடு என்ற பாக்கியஸ்தானம் நன்றாக வேலை செய்யவேண்டும் என்றால் தொடர்ச்சியாக நீங்கள் தான தர்மத்தை செய்து வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, October 19, 2015

திருமணம்:: இராகு தசா


வணக்கம்!
          இராகு தசா நடப்பவர்கள் திருமணம் செய்யும்பொழுது அதிக தடை ஏற்படும். திருமணம் அவ்வளவு எளிதில் கைகூடாது. திருமண புரோக்கர்கருக்கு ஏகாப்பட்ட பணம் கொடுத்து வரனை பார்க்க நேர்ந்திருக்கும். அப்படி இருந்தும் வரன் அமையவில்லை என்று நினைப்பவர்கள் கீழே உள்ளது போல் செய்யுங்கள்.

இராகு தசா நடந்தால் திருமணத்தில் ஏகாப்பட்ட குழப்பம் இருக்கும். திருமணம் செய்யலாமா அல்லது வேண்டாமா என்று கூட மனதில் தோன்றும். இராகு மனதை கெடுப்பதால் இந்த நிலை என்று நினைத்துக்கொண்டு திருமணத்தை செய்துக்கொள்ளுங்கள்.

பெண் அல்லது ஆண் அழகாக இருக்கவேண்டும் என்று நினைக்கவேண்டாம். ஏதோ நல்ல குடும்பத்தில் பிறந்த வரனாக இருந்தாலு் போதும் என்று நினையுங்கள். காதல் திருமணம் நடப்பதற்க்கு வாய்ப்பு அதிகம் இருக்கும். பிற மதங்களில் உள்ளவர்களை திருமணம் செய்ய நினைப்பீர்கள். காதல் ஏற்பட்டால் செய்துக்கொள்ளுங்கள் அப்படி இல்லை என்றால் வீட்டில் உள்ளவர்கள் பார்ப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.

திருமணம் நடைபெறவில்லை என்றால் சென்னை டூ மாமல்லபுரம் போகும் வழியில் உள்ள திருவிடந்தை என்ற ஊரில் அமைந்திருக்கும் பெருமாளை ஒரு முறை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். 

திருச்சிக்கு அருகில் உள்ள வயலூர் முருகனுக்கும் சென்றுவரலாம். உங்களின் பகுதியில் திருமணத்திற்க்கு என்று ஒரு சில ஸ்தலங்கள் இருக்கும் அங்கு சென்று வழிபட்டுவிட்டு வாருங்கள். தடைபடுகின்ற திருமணம் நடைபெறும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சோதிட அனுபவம்


வணக்கம்!
          நேற்று ஒரு நண்பர் சாேதிடம் பார்க்க வந்திருந்தார். பொதுவாக பிளாக் வழியாக வரும் நண்பர்களுக்கு சோதிட அறிவு இருக்கும். சோதிட அறிவு கண்டிப்பாக இருக்கவேண்டும். அதே நேரத்தில் அதில் புரிதலும் இருக்கவேண்டும்.

திருமணம் சம்பந்தமாக சோதிடம் பார்க்க வந்திருந்தார். அவரின் பயம் ஏழாவது வீட்டு அதிபரி எட்டாவது வீட்டு அதிபதியோடு சம்பந்தம்பட்டு இருக்கிறது அதனால் திருமண வாழ்வில் பிரச்சினை ஏற்படுமோ என்று பயப்படுகிறார். 

சோதிடத்தில் ஏழாவது வீட்டு அதிபதி எட்டாவது வீட்டு அதிபதியோடு சேர்ந்து இருப்பதால் பிரச்சினை வரும் என்று எழுதியிருப்பார்கள். இது அனைவருக்கும் நடக்குமா என்றால் அது கிடையாது. ஏழாவது வீட்டு அதிபதி எட்டாவது வீட்டு சம்பந்தப்பட்டோ அல்லது எட்டாவது வீட்டில் இருந்து நன்றாக வாழும் தம்பதிகள் எத்தனையோ பேர் இருக்கின்றார்கள்.

ஒரு சிலருக்கு பிரச்சினை ஏற்படலாம் அது அந்த கிரகத்தின் தசாவில் அப்படி ஏற்படலாம் அதற்கும் பரிகாரம் நிறைய சொல்லி வைத்துள்ளார்கள். அதனை செய்து பிரச்சினை வராமல் காத்துக்கொள்ளலாம். சோதிடத்தை நன்றாக படியுங்கள். அனைத்து விதியும் வேலை செய்வதில்லை என்பதையும் தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள். அப்படியே வேலை செய்தாலும் பரிகாரமும் இருக்கின்றது என்பதையும் தெரிந்துக்கொள்ளுங்கள். இறைநம்பிக்கை கிரகங்களை மீறி வேலை செய்யும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, October 18, 2015

பொறுமை


ணக்கம்!
          பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டு நம்மை சந்திப்பவர்களுக்கு சொல்லும் ஒரு பரிகாரம் என்ன என்றால் பொறுமையாக இருங்கள் என்ற வார்த்தை மட்டுமே.

பொதுவாகவே ஒரு கிரகம் பாதிப்பை ஏற்படுத்தும் முன்பு அதற்கு பரிகாரம் செய்துவிட்டால் பிரச்சினையில் இருந்து முழுமையாக தப்பிக்கவில்லை என்றாலும் ஒரளவு தப்பித்துவிடலாம் ஆனால் கிரகங்கள் தாக்க ஆரம்பித்தபிறகு நாம் பரிகாரம் செய்தாலும் நாம் பட்டு தான் ஆகவேண்டும்.

ஒரு சிலர் சரியாக மாட்டிக்கொண்ட பிறகு அல்லல்பட்டு தேடி வருவார்கள். கையில் எதுவும் இல்லை என்று வருவார்கள். அப்படிப்பட்டபவர்களிடம் இந்த நேரத்தில் எதுவும் செய்யவேண்டாம் பொறுமையாக இருந்துவிடுங்கள். உங்களை சுற்றி எது நடந்தாலும் பொறுமையாக இருங்கள். கொஞ்ச நாளில் சரியாகிவிடும் என்று சொல்லுவேன். அப்படி இருந்தும் அவர்களால் பொறுமையாக இருக்கமுடியாது காரணம் சிக்கல் அப்படிப்பட்டதாக இருக்கும்.

கையிலும் ஒன்றும் இல்லை. வழியே இல்லை என்றாலும் பொறுமையாக இருந்துவிட்டால் போதும் அந்த காலகட்டம் கொஞ்ச நாளில் மாறிவிடும். அதன் பிறகு ஏதாவது ஒரு வழியை நாம் தேர்ந்தெடுத்து முன்னேற்றம் அடைந்துவிடலாம்.

ஒரு கிரகம் பாதிப்பை ஏற்படுத்திவிட்டு பிரச்சினையை கிளப்பினால் சுற்றி இருப்பவன் முழுவதும் எதிரியாகவே மாறிவிடுவார்கள். அனைவரும் பழி தீர்ப்பது போல் நடக்க ஆரம்பித்துவிடுவார்கள். யாரை நம்பி உதவி கேட்பது என்ற நிலை ஏற்பட்டுவிடும்.

தவறான நேரத்தில் ஏதாவது ஒரு முடிவை எடுக்கும்பொழுது அது நமக்கு மேலும் பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடும். உங்களுக்கு இப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டுவிட்டால் அந்த நேரத்தில் பொறுமையாக இருங்கள். கொஞ்ச காலம் போகட்டும் என்று இருங்கள் கண்டிப்பாக ஒரு நல்ல நேரம் உங்களுக்கு வரும்.

சென்னைக்கு வருவதாக ஒரு திட்டம் இருக்கின்றது. எத்தனை பேர் சந்திப்பார்கள் என்பதை பொறுத்து சென்னை பயணம் முடிவாகும். சென்னையில் உள்ள நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பாக்கியஸ்தானம்


ணக்கம்!
          பாக்கியஸ்தான வீட்டைப்பற்றி பார்த்து வந்தோம். அதில் ஒரு சில கருத்தைப்பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

ஒருவர் சோதிடம் பார்க்க வந்திருந்தார். அவரின் தந்தைக்கு முழங்கால் வலியால் அவதிப்பட்டார். தந்தை மீது கடுமையான பாசம்  அந்த காரணத்தால் மிகுந்த செலவு செய்து அவரின் தந்தைக்கு மருத்துவம் எல்லாம் பார்த்தார். இன்றைய காலத்தில் தந்தை மீது பையன்கள் பாசம் வைப்பது எல்லாம் பெரிய விசயம். மனிதர்களை பற்றி நான் குறை சொல்லவில்லை காலம் கலிகாலம் அல்லவா. எவ்வளவு செலவு செய்தாலும் அவரின் தந்தைக்கு வலி போகவில்லை. 

அவரின் ஜாதகத்தில் சூரியன் பாக்கியஸ்தானமான ஒன்பதாவது வீட்டில் மகர ராசியில் அமர்ந்து இருந்தது. சனியின் வீடாக இருந்தாலே போதும் எது அகப்படுகிறதோ அதனை உடைத்துவிடுவார். முடவனின் குணம் அல்லவா அதுவும் சூரியன் சிக்கினால் சும்மா விடுவாரா. பாக்கியஸ்தானத்தில் அமர்ந்த காரணத்தால் தந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடுவார். 

தந்தைக்கு கால் ஊனம் ஏற்படாமல் வலியை மட்டும் கொடுத்துவிட்டார். தந்தை நிறைய புண்ணியம் செய்திருப்பார் என்று நினைக்கிறேன். வலியோடு விட்டுவிட்டார். நம்மிடம் வந்தற்க்கு ஏதாவது ஒன்றை சொல்லவேண்டும் அல்லவா அதனால் அவருக்கு ஒரு பரிகாரத்தை சொன்னேன்.

அவரின் குலதெய்வம் கருப்பராயன். அவர் இதுவரை கும்பிட்டு வந்தது அது தான். என்ன ஒன்று என்றால் அவரின் சொந்த ஊரில் இருக்கும் குலதெய்வத்தை கும்பிடாமல் வெளியூரில் இருக்கும் குலதெய்வத்தை கும்பிட்டுவந்தார். அவரிடம் சொந்த ஊரில் இருக்கும் குலதெய்வத்தை கும்பிடுங்கள் என்று சொன்னேன். இரண்டு மாதம் சென்று என்னை தொடர்புக்கொண்டு தற்பொழுது பரவாயில்லை என்றார். விடாமல் தொடர்ந்து கும்பிட்டு வாருங்கள் சரியாகிவிடும் என்றேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, October 17, 2015

ஆலய தரிசனம்



ணக்கம்!
          இன்று காலை புதுக்கோட்டை சென்றேன். அங்கிருந்து பிள்ளையார்பட்டி சென்று விநாயகரை தரிசனம் செய்துவிட்டு நண்பர் ஒருவரின் இல்லத்திற்க்கு சென்றுவிட்டு வந்தேன். நான் எங்கு சென்றாலும் உடனுக்குடன் அந்த கோவிலை தரிசனம் முடிந்தவுடன் ஆன்மீக பயிற்சி எடுப்பவர்களுக்கு வாட்ஸ்அப்பில் கோவிலில் எடுத்த புகைப்படத்தை அனுப்பிவிடுவேன். அதன் பிறகு முகநூலில் ஒரு படத்தை போடுவது உண்டு.

நான் வெளியூர் சென்ற சமயத்தில் முகநூலை பாருங்கள். உடனே அந்த கோவிலின் தரிசனத்தை பெறமுடியும். தினமும் நமது ஜாதககதம்பத்திற்க்கு வாருங்கள் திடீர் பயணமாக உங்களின் ஊருக்கு வரலாம். அப்பொழுது நீங்கள் என்னை சந்திகலாம். பல நண்பர்கள் அந்த ஊருக்கு சென்று வந்தபிறகு தான் போன் செய்து கேட்கிறார்கள். அதனால் தினமும் ஜாதககதம்பத்திற்க்கு வாருங்கள்.



அன்புடன்
ராஜேஷ்சுப்பு

தான தர்மம் வெற்றியை தரும்


ணக்கம்!
          இது கலியுகம் மனிதர்களின் குணம் என்ன என்பது தெரிந்த ஒன்றே. அப்படி இருந்தும் ஒரு சில மனிதர்களிடம் இருக்கும் தர்ம சிந்தனையால் இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஒரு சில அப்பாவி மக்களாலும் இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.

மனிதனிடம் தர்ம சிந்தனை இருந்தால் தான் அவனுக்கு காரியம் தடை இல்லாமல் நடக்கும் என்று தெரிந்தே தான் ஒன்பதாவது வீட்டை தேர்ந்தெடுத்து வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் தர்மம் செய்தால் பாக்கியஸ்தானம் நன்றாக வேலை செய்யும் என்று காட்டிவிட்டார்கள்.

கேரளாவில் நீங்கள் ஏதோ ஒரு காரியத்திற்க்கு பரிகாரம் செய்ய சென்றால் முதலில் அவர்கள் செய்வது தானம் செய்ய வைப்பார்கள். ஏதாவது ஒரு தானத்தை முன் நிறுத்துவார்கள். உங்களை செய்யசொல்லுவார்கள் அப்படி இல்லை என்றால் அவர்களே உங்களிடம் பணத்தை வாங்கி செய்வார்கள்.

இதனை ஏன் செய்வார்கள் என்றால் அப்பொழுது தான் அவர்கள் செய்யும் பூஜை வெற்றியை தரும். காரிய தடை இல்லாமல் காரியம் நடைபெறவேண்டும் என்று சொல்லுவார்கள். நீங்கள் எந்த வேலை செய்தாலும் முதலில் இப்படி தானம் செய்துவிட்டு செயலை தொடங்கினால் உங்களுக்கு வெற்றி தேடிவரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, October 16, 2015

பிறப்பை தேர்ந்தெடுக்கும் மக்கள்


ணக்கம்!
          பொதுவாக இன்றைய காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு மருத்துவர்கள் நல்ல நாளை தேர்வு செய்துக்கொண்டு வாருங்கள் அந்த நாளில் ஆப்ரேஷன் செய்து எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லுகிறார்கள். அதன்படி மக்களும் சோதிடர்களை நாடி தேதியை குறித்து அந்த நாளில் குழந்தையை ஆப்ரேஷன் செய்து எடுத்துக்கொள்கிறார்கள்.

எப்படி குழந்தையை நல்ல நாளில் எடுத்தாலும் அதற்கு வரவேண்டிய பிரச்சினை எதுவும் மாறாமல் தான் வருகின்றது. இவர்கள் தேதியை குறித்து எடுத்தாலும் பிரச்சினை வராமல் இருப்பது இல்லை. இதனை எல்லாம் மீறி பல விசயங்களை கடவுள் நமக்கு காட்டிவிடுகிறார்.

பொதுவாக நான் சோதிடம் பார்த்தால் ஜாதகத்தை மட்டும் பார்த்து பலனை சொல்லுவதில்லை. சம்பந்தப்பட்ட நபர்களிடம் பேசி அதற்கு தகுந்தார் போல் பரிகாரத்தை சொல்லுவது உண்டு. ஏன் இப்படி செய்கிறேன் என்றால் பிறப்பில் இருக்கும் நிறைய சந்தேகத்தை கொண்டு தான் இதனை செய்கிறேன்.

நாம் என்ன தான் நல்ல நாளை தேர்ந்தெடுத்து பிறப்பை நடத்தினாலும் நமது ஜாதகத்தில் எதாவது ஒரு இடத்தில் கடவுள் ஒரு ஓட்டையை வைக்காமல் இருக்கமாட்டார். அது பூதகரமாக கிளம்பி பிரச்சினையை கொடுத்துவிடும்.

பிறப்பை தேர்ந்தெடுத்தாலும் அந்த குழந்தை நன்றாக வளர்ந்து நல்ல வாழ்வை அடையவேண்டும் என்றால் அந்த குழந்தைக்கு என்று தனியாக தர்மம் செய்யுங்கள். அது குழந்தையை காக்கும்.

நீங்களும் சோதிடபலனை சொல்லும்பொழுது சம்பந்தப்பட்ட நபர்களிடமும் கொஞ்சம் பேசிவிட்டு பலனை சொல்லி நல்ல ஆலோசனையை வழங்குங்கள். 

புதுக்கோட்டை பகுதியில் உள்ள நண்பர்கள் சந்திக்க வேண்டும் என்றால் தொடர்புக்கொள்ளுங்கள். நாளை (17.10.2015 சனிக்கிழமை) புதுக்கோட்டைக்கு வருகிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பயண அனுபவம்


வணக்கம்!
          தொடர் பயணம் செய்து வந்தமையால் காலையிலேயே உங்களுக்கு பதிவை தரமுடியவில்லை. கோயம்புத்தூரில் இருந்து காலையில் தான் தஞ்சாவூர் வந்தேன். பதிவில் சொல்லும் ஊர்களைவிட சொல்லாத ஊர்களுக்கு அதிகமாக சென்று வருகிறேன். அனைத்தும் திடீர் பயணங்களாக இருப்பதால் பதிவில் சொல்லமுடிவதில்லை.

பயண அனுபவத்தைப்பற்றி சொல்லுவதற்க்கும் ஒரு சில காரணங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு அனுபவத்தையும் இங்கே சொல்லும்பொழுது அதனை படித்துவிட்டு அதில் இருந்து ஒன்றை நீங்கள் தெரிந்துக்கொள்ளமுடியும்.

பல பதிவுகளில் கெடுதலான நேரம் வரும்பொழுது எச்சரிக்கையுடன் செயல்படுங்கள் என்று சொல்லிக்கொண்டே வருகின்றேன். உங்களுக்கு நன்றாக சோதிடம் தெரிந்தும் கூடு நீங்கள் கோட்டையை விடும்பொழுது கிரகங்கள் உங்களை எப்படி சாமார்த்தியமாக ஏமாற்றுகிறது என்பது புரிகிறது. 

பணத்தை இழப்பவர்கள் அதிகம் பேர் இருக்கின்றார்கள். சோதிடத்தில் இந்த காலக்கட்டத்தில் எதுவும் செய்யகூடாது என்று சொன்னால் கூட அந்த காலக்கட்டத்தில் தான் நான் செய்வேன் என்று விடாப்பிடியாக செய்கிறார்கள்.

சனி கிரகம் ஏழில் வரும்பொழுது உங்களுக்கு தெரியாமலேயே பல வேலைகளை பார்த்துவிட்டு செல்லும் அதன் பாதிப்பு அஷ்டமசனியின் காலத்தில் தான் தெரியவரும். இதேப்போல் ஜாதகத்தில் கிரகங்களால் பல பாதிப்பு இருக்கின்றது அதனை பார்த்து தெரிந்துவிட்டு அதன் பிறகு உங்களின் செயல்பாடு இருக்கட்டும். போனபிறகு எதனை செய்தாலும் திரும்பிவருவது என்பது நடக்காத ஒன்று.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, October 15, 2015

பெரியோர்க்கு


வணக்கம்!
          ஐம்பது வயதிற்க்கு மேல் அதிகமாக குடும்பத்தோடு ஈடுபாடு காட்ட கூடாது. அந்த நேரத்தில் ஆன்மீகத்திற்க்கு பக்கம் அதிகம் ஈடுபாடு காட்டவேண்டும்.

பல பேர்களை பார்த்து இருக்கிறேன். அவர்களின் வாரிசு ஐம்பது வயது வந்தால் கூட அவர்களை வைத்து அவர்களின் குடும்பத்தை கவனிக்க சொல்லுவதில்லை. அவர்கயே இழுத்துபோட்டு வேலையை செய்துக்கொண்டு இருப்பார்கள்.

ஐம்பது வயது கூட கிடையாது அதற்கு குறைவாகவே ஆன்மீகத்திற்க்கு நாட்டம் காட்டி கோவில் குளங்கள் மற்றும் ஆசிரத்தை தேடி செல்லவேண்டும். இந்த வாழ்க்கையை இளம்வயதில் செம்மையாக செய்துவிட்டால் செல்லுகின்ற பாதைக்கு வழி வகுக்கலாம். இந்த வாழ்க்கையை குடும்பத்திற்க்கே செலவு செய்தால் வாழ்ந்த வாழ்க்கை வீண் என்றாகிவிடும்.

இளம்வயதில் அனைத்தையும் செய்துவிடவேண்டும். குடும்பத்திற்க்கு தேவையான விசயங்களை செய்துவிட்டு குடும்ப உறுப்பினர் உங்களின் வாரிசாக தேர்ந்தெடுத்துவிட்டு அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்துவிட்டு ஆன்மீகபக்கம் தலைசாத்திவிடவேண்டும். உங்களின் குடும்பத்தில் இருந்தால் கூட இந்த வாழ்க்கை நிரம்தரம் இல்லை என்பதை உணர்ந்து அதற்கு தகுந்தார்போல் செயல்பாடு இருக்கவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, October 14, 2015

பரிகாரம்


ணக்கம்!
          பல நண்பர்கள் புத்தகங்களை படித்துவிட்டு ஏதாவது ஒரு தோஷம் இருக்கின்றது என்று அவர்களே கிரகங்களுக்கு சென்று பரிகாரம் செய்துக்கொண்டு இருக்கின்றனர். 

புத்தகங்களில் உள்ள தோஷம் எல்லாம் வேலை செய்வது கிடையாது. அனுபவத்தில் பல தோஷங்கள் வேலை செய்யாமல் இருப்பதை பார்த்து இருக்கிறேன். ஒரு பிரச்சினை வந்தவுடன் இது தான் பிரச்சினையாக இருக்குமோ என்று பரிகாரங்களை அவர்களே செய்துக்கொண்டு இருக்கின்றனர்.

முதலில் ஜாதகத்தில் உள்ள தோஷத்திற்க்கு சம்பந்தப்பட்ட கிரகத்திற்க்கு இவர்கள் பரிகாரம் செய்கின்றனர். பரிகாரம் செய்வது தவறு இல்லை ஆனால் எல்லாவற்றுக்கும் கிரகத்தையே பிடித்துக்கொண்டு இருப்பது நல்லதல்ல.அதே நேரத்தில் கிரகங்களுக்கு பரிகாரம் செய்தவுடன் உடனே நமக்கு நல்லதை தரும் என்பதும் சந்தேகமே. கிரகங்களுக்கு உள்ள தேவதைக்கு பரிகாரம் செய்தால் ஒரளவு பலன் கிடைக்கும்.

முதலில் பிரச்சினை எதில் இருந்து வருகிறது என்பதை முடிவு செய்துவிட்டு அதன் பிறகு அதற்கு என்ன செய்யலாம் என்பதை யோசித்துவிட்டு செய்வது நல்லது.

உதாரணமாக பலருக்கு கணவன் மனைவிக்குள் பிரச்சினை ஏற்படும் அதனை பேசி தீர்த்துவிட்டு அதன் பிறகு ஏதாவது ஒரு கிரகம் பிரச்சினையை தரும் அதற்கு பரிகாரம் செய்யலாம். பல பிரச்சினைகளுக்கு இப்படி தான் தீர்வு காணவேண்டும் அதன் பிறகு பரிகாரம் செய்துக்கொள்ளலாம்.

இன்று மதியம் கோவை பயணம். நாளை திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் பகுதியில் உள்ள நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு


Tuesday, October 13, 2015

பாக்கியஸ்தானத்தில் பாக்கி


க்கம்!
          என்னிடம் சோதிடம் பார்க்க ஒருவர் வந்திருந்தார். அவரின் பையனுக்கு திருமணம் நடைபெறவில்லை அதற்கு காரணம் தெரியவில்லை என்று சொன்னார். நான் அவரின் பையனின் ஜாதகத்தை பார்த்துவிட்டு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டேன்.

நான் கடை வைத்திருக்கிறேன் சார் என்று சொன்னார். அந்த கடை எங்கு உள்ளது என்று கேட்டேன். அவரின் கடை ஒரு கோவில் நிலத்தில் உள்ளது என்றார்.

நாம் தொடர்ந்து சோதிடம் பார்த்து வந்தால் நமக்குள்ளே வந்தவரின் பிரச்சினை என்ன என்று தெரிந்துவிடும். அதாவது நம்மை அறியாமலேயே என்ன என்று புரிந்துவிடும். இது எல்லா சோதிடர்களுக்கும் கொஞ்ச நாளில் உள்ளுணர்வில் ஏற்படுகின்ற ஒன்று.

அவர் கடை கட்டியிருந்த இடம் கோவிலுக்கு சொந்தமான இடம். கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கடையை வைத்துக்கொண்டு கோவிலுக்கு வரி செலுத்தாமல் இருந்திருக்கிறார் அந்த காரணத்தால் அவரின் பையனுக்கு திருமணம் தள்ளிக்கொண்டே போனது. உடனே அவரிடம் கோவிலுக்கு உள்ள வரியை செலுத்திவிடுங்கள் திருமணம் நடைபெறும் என்று சொன்னேன்.

பையனின் ஜாதகத்தில் ஒன்பதாவது வீட்டில் ராகுவும் செவ்வாயும் சேர்ந்து இருந்தது. செவ்வாய் நிலத்திற்க்கு காரணம் வகிக்கிறார் ராகு ஏமாற்றுதலுக்கு காரணம் வகிக்கிறார். இதனை கண்டறிந்து சொன்னவற்றில் உண்மை இருந்தது.

இன்றைய காலத்தில் கோவிலுக்கு உள்ள கடைகளில் அதிகம் பேர் வரி செலுத்தாமல் பாக்கி வைத்திருக்கின்றனர். பொதுவாக நாம் முன்னேற்றம் அடையவேண்டும் என்றால் ஆன்மீகம் சம்பந்தமாக உள்ள விசயங்களில் பாக்கி வைத்திருக்ககூடாது. ஒரு சிலர் கோவிலுக்கு மொட்டை அடிக்கிறேன் என்று வேண்டிருப்பார்கள் அதனை கூட நாம் பாக்கி வைக்ககூடாது. நல்ல வாழ்க்கையை ஆண்டவன் கொடுக்கிறான் நம்முடைய குறுகிய புத்தியால் அதனை சீரழிக்கிறோம்.

கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் பகுதி நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளுங்கள். உங்களை விரைவில் சந்திக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, October 12, 2015

ஆலய தரிசனம்


வணக்கம்!
          நேற்று அருப்புக்கோட்டையில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் ஆலயம் சென்று தரிசனம் செய்துவிட்டு வந்தேன். நான் எங்கே ஒரு இடத்தில் பிறந்து இப்படிப்பட்ட கோவிலுக்கு எல்லாம் செல்லவேண்டும் என்று ஒரு சக்தி நம்மை அழைத்துக்கொண்டு செல்லுகின்றது.

அருப்புக்கோட்டை மையத்தில் இந்த கோவில் உள்ளது. மிகவும் அழகான ஒரு கோவில் அதே நேரத்தில் சக்தி மிகுந்த கோவிலை தரிசனம் செய்ய வாய்ப்பு அமைந்தது. இந்த கோவிலை தரிசனம் செய்யவேண்டும் என்று தான் சென்றேன். 


என்னை மதுரையில் இருந்து அழைத்து சென்ற ஆகாஸ் நண்பருக்கு நன்றியை சொல்லவேண்டும். நல்ல ஒரு தரிசனத்தை தரிசித்துவிட்டு வந்தேன். அருப்புக்கோட்டை சென்றால் இந்த கோவிலை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

கீழே கோவிலைப்பற்றிய விபரத்தை கிளிக் செய்து பாருங்கள்


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, October 11, 2015

அனுபவம்


ணக்கம்!
          சனிப்பிரதோஷம் என்பதால் இரண்டு சிவன் கோவிலுக்கு அபிஷேக ஆராதனை பொருட்களை வாங்கிக்கொடுத்துவிட்டு ஒரு கோவிலில் பிரதோஷ வழிபாட்டை பார்த்தேன்.

பிரதோஷ வழிபாடு மிக சிறப்பாக அமைந்தது அதே நேரத்தில் இந்த பகுதியில் ஒரு சில இடத்தில் பிரதோஷ வழிபாடு நடைபெறும்பொழுது கருடன் வந்து வட்டமிடும் அவ்வப்பொழுது இதனை தரிசனம் மற்றும் பிரதோஷ தரிசனம் நன்றாக இருக்கும்.

கருட தரிசனம் வானத்தில் வட்டமிட்டு காட்டும் இதனை யாரும் கவனிப்பதில்லை அதற்கு காரணம் ஒவ்வொருவரும் ஒரு ஆன்மீக சொற்பொழிவை நடத்திக்கொண்டு இருக்கின்றார்கள். 

ஒரு கோவிலுக்கு சென்றால் நமது குறிக்கோள் வழிபாட்டில் தான் இருக்கவேண்டும். ஒவ்வொருவரும் தமது ஆன்மீக சொற்பொழிவை நடத்தினால் நாம் எதற்காக கோவிலுக்கு சென்றோம் என்பது திசை மாறி போய்விடும்.

நிறைய தெரிந்து வைத்திருந்தால் கூட கோவிலை விட்டு வெளியே வந்து தெரிந்த விசயத்தை பிறர்களுக்கு சொல்லுங்கள். கோவிலுக்குள் நாம் பேசாமல் இருந்தால் தான் நமக்கும் பிறர்க்கும் நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, October 10, 2015

ஒன்பதில் சூரியன்


வணக்கம்!
          பாக்கியஸ்தானத்தில் ஒன்பதாவது வீட்டில் சூரியன் இருந்தால் பிரச்சினை தரும் என்று கடந்த பதிவில் பார்த்து இருக்கிறோம். அதில் இருந்து மேலும் சில கருத்துக்களை பார்க்கலாம்

சூரியன் தனித்து ஒன்பதாவது வீட்டில் அமரும்பொழுது தந்தைக்கு பிரச்சினை ஏற்படுத்தும் என்று சோதிட புத்தகத்தில் படித்தது உண்டு. ஒன்பதாவது வீட்டில் அமர்ந்தால் அனுபவத்தில் கூட அப்படி தான் நடந்து இருக்கின்றது.

ஒன்பதாவது வீட்டில சூரியன் அமரும்பொழுது தந்தைக்கு மகனுக்கு உறவு நன்றாக இருக்காது என்று சொல்லுகிறார்கள். உண்மையில் தந்தைக்கு ஏதாவது ஒரு உடலில் பிரச்சினை ஏற்பட்டு இருந்தால் தந்தைக்கும் மகனுக்கும் நன்றாக இருக்கும்.

உடல்நிலை பாதிக்கப்பட்ட ஜாதகரின் தந்தைக்கும் மகனுக்கும் உறவு நன்றாக இருக்கின்றது. ஒரு சில ஜாதகர்களின் மூத்தசகோதர்களுக்கு வாரிசு இல்லாமல் இருக்கின்றது அனுபவத்தில் இதனை சொல்லுகிறேன் பல ஜாதகங்களில் இப்படி நடந்து இருக்கின்றது.

மூத்தசகோதர்கள் அல்லது மூத்தசகோதரிகளின் வாழ்வு நன்றாக இருப்பதில்லை. இது அனுபவத்தில் பார்த்த ஒன்று விதிகளை பார்த்து இதனை சொல்லமுடியாது. 

ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை அன்று  அருப்புக்கோட்டை மற்றும் மதுரையில் என்னை சந்திக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சனிப்பிரதோஷம்


வணக்கம்!
          இன்று சனிப்பிரதோஷம் மாலை நேரத்தில் சிவவழிபாடு செய்யவேண்டிய நாள். எந்த பிரதோஷத்தையும் விட சனிபிரதோஷத்திற்க்கு அதிக சக்தி உண்டு என்று பரப்பபட்டுள்ளது. இதுவரை பிரதோஷத்தில் பங்குக்கொள்ளாத நபர்கள் இன்று பங்குக்கொள்ளலாம்.

ஒரு சிலர் வீட்டில் நடராஜர்க்கு அபிஷேகம் செய்வார்கள் அவர்களும் இன்று செய்யலாம். வீட்டில் பூஜை செய்யமுடியாதவர்கள் அருகில் இருக்கும் சிவலாயம் சென்று பிரதோஷத்திற்க்கு தேவையான அபிஷேகப்பொருட்களை வாங்கிக்கொடுக்கலாம்.

நம்மால் பிரதோஷ பூஜைக்கு செல்லமுடியவில்லை என்ற நிலை ஏற்படும்பொழுது மாலை வேளையில் சிவனை நினைத்துக்கொண்டு இருக்கலாம். இடைவிடாத சிவன் நினைப்பு உங்களை உயர்த்தும்.


சிவன் கோவிலை சுற்றி வலம் வரலாம். கிரிவலம் போல் சுற்றி வரலாம். சந்திரன் பாதிக்கப்பட்டு இருக்கும் ஜாதகர்கள் மாலை வேளையில் இன்று சிவன் கோவிலை சுற்றி வாருங்கள் நல்ல மனநிலை உங்களுக்கு உருவாகும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, October 9, 2015

அம்மன் அருள்


ணக்கம்!
          ஒரு நபருக்கு அம்மனின் முழுஅருளும் கிடைத்தால் அந்த நபர்களை நோக்கி அனைத்து வாய்ப்புகளையும் அம்மன் கொடுக்கும். அந்த வாய்ப்புகளை மிக சரியாக பயன்படுத்தினால் மிக உயர்ந்த இடத்தை நோக்கி நீங்கள் செல்லலாம்.

ஒரு சிலருக்கு அம்மனை மனமார பிராத்தனை செய்து இந்த இடத்தை பெறுகின்றனர். ஒரு சிலருக்கு நானாக தயார் செய்து கொடுத்து இருக்கிறேன்.

ஒரு ஆளை தேர்ந்தெடுத்து இவருக்கு அனைத்தையும் செய்துக்கொடுக்கவேண்டும் என்று நினைத்து அவருக்கு அம்மனை வைத்து நல்லது செய்யவேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டால் குறைந்தது ஆறு மாத காலத்தில் உறுதியாக மிக உயர்ந்த நிலையை அவர்கள் அடைவார்கள்.

என்னை தேடிவரும் நண்பர்களுக்கு இப்படி நல்லது செய்வது உண்டு. என்ன ஒன்று அவர்களை நான் நம்பவேண்டும். நம்பிவிட்டால் கண்டிப்பாக நினைத்து பார்க்கமுடியாத ஒரு வாழ்க்கை அமைத்துக்கொடுத்துவிடுவேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, October 8, 2015

வாடிக்கையாளர் வாய்ப்பு


ணக்கம் !
          பல வருடங்களாக இந்த தொழிலில் இருக்கின்றேன். நான் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் அவர்களை பற்றி எல்லாம் கேட்டு தெரிந்துக்கொண்ட பிறகு பிற இடங்களுக்கு செல்லும்பொழுது ஏதாே ஒரு நண்பர் இந்த தொழிலில் உள்ளவர்கள் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்கும்பொழுது எனக்கு தெரிந்தவர்களை சொல்லுவேன். அவர்கள் சம்பந்தப்பட்ட நபர்களை தொடர்புக்கொண்டு அவர்களுக்கு தேவையானதை நடத்திக்கொள்வார்கள்.

உதாரணத்திற்க்கு நீங்கள் ஒரு கார் வியாபாரியாக இருந்தால் என்னிடம் யாராவது கார் வியாபாரி இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்கும்பொழுது உங்களைப்பற்றி சொல்லுவேன். அவர்கள் உங்களை தொடர்புக்கொண்டு அவர்களுக்கு தேவையான காரை வாங்குவார்கள்.

என்னை சந்திக்கும் நண்பர்கள் என்ன தொழில் செய்துக்கொண்டு இருக்கின்றீர்கள் என்பதைப்பற்றி சொல்லிவிடுங்கள். உங்களின் தொழில் சம்பந்தமாக யாராவது என்னை தொடர்புக்கொண்டால் உங்களை நான் பரிந்துரைப்பேன்.

என்னால் முடிந்த ஒரு சின்ன சேவை. இதற்கு கமிஷன் எதுவும் நான் வாங்குவது கிடையாது. என்னை தொடர்புக்கொள்பவர்களுக்கு சொல்லுவேன். உங்களுக்கும் ஒரு வாடிக்கையாளர் கிடைப்பார் அல்லவா. இனிமேல் என்னை சந்திக்கும்பொழுது உங்களின் தேவை மற்றும் உங்களின் வியாபாரத்தைப்பற்றி சொல்லுங்கள். நேர்மையாக இருக்கவேண்டும். எனது பெயருக்கு பங்கம் விளைவித்துவிடகூடாது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

செல்வவளம் ஆடைதானம்


ணக்கம்!
          இந்த கருத்தைப்பற்றி நான் ஏற்கனவே ஜாதககதம்பத்தில் சொல்லிருக்கிறேன். இதனை செய்ய தற்பொழுது காலம் வருவதால் மறுபடியும் உங்களுக்கு ஞாபகத்திற்க்கு வருவதற்க்கு சொல்லுகிறேன்.

தீபாவளி காலத்தில் ஆடை தானத்தைப்பற்றி சொல்லிருக்கிறேன். வரும் தீபாவளிக்கு நீங்கள் முடிந்தளவு பிறர்க்கு ஆடையை தானமாக அளிக்கலாம். இல்லாதவர்கள் என்று கிடையாது இருப்பவர்களுக்கு கூட இதனை நீங்கள் செய்யலாம்.

ஒருவர்க்கு ஆடை தானம் செய்யும்பொழுது அதன் வழியாக நமக்கு நிறைய செல்வவளம் கிடைக்கிறது என்பது எனது அனுபவத்தில் கண்ட உண்மை. பிறர்க்கு பண்டிக்கை காலத்தில் நாம் இப்படி உதவி செய்யும்பொழுது அந்த காலத்தில் எல்லாேரும் மகிழ்ச்சியோடு இருக்கும்பொழுது அவர்களும் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். இந்த மகிழ்ச்சிக்கு இவர் காரணமாக இருக்கும்பொழுது அவர்களுக்கு ஒரு ஆத்மா வழியாக நல்ல ஆசி கிடைக்கிறது. 

தீபாவளிக்கு உதவதற்க்கு தற்பொழுது இருந்து அதற்கு தயாராக இருப்பீர்கள் என்று சொல்லுகிறேன். தீபாவளிக்கு தான் நாம் செய்யவேண்டும் என்பதில்லை எப்பொழுதும் இதனை செய்யலாம். உங்களிடம் குறைவான பணம் தான் இருக்கின்றது என்றால் கூட அதற்கு தகுந்தார்போல் ஆடை வாங்கிக்கொடுங்கள். குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு வாங்கிக்கொடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பாக்கியஸ்தானத்தில் சூரியன்


வணக்கம்!
         ஒரு கிராமத்தில் சோதிடம் பார்க்க சென்று இருந்தபொழுது அந்த வீட்டு பையனுக்கு ஒன்பதாவது வீட்டில் சூரியன் இருந்தது. ஒன்பதாவது வீட்டில் இருந்த சூரியன் இளம் வயதில் அவரின் தந்தையை பறித்தது. அதாவது அவர் இளம்வயதில் இறந்துவிட்டார். இதயகோளாறு நோய் சம்பந்தமாக இறந்துவிட்டார்.

மூன்று பெண் குழந்தைகள் இந்த பையன் தான் அவர்களை காப்பாற்றவேண்டும். பையனின் தந்தை எந்த சொத்தும் சேர்க்கவில்லை ஆனால் அவர் நிறைய புண்ணியம் செய்து இருக்கிறார். அவரை பெயரை சொன்னாலே பல பெயர் உதவ முன்வந்தார்கள்.

பையனுக்கு பள்ளி கல்வி முடித்த நிலையில் அவரின் தந்தை இறந்த காலத்தில் அந்த ஊரில் உள்ளவர்கள் பையனுக்கு கல்வி உதவி செய்து படிக்கவைத்தார்கள். அந்த பையன் நன்றாக படித்து தற்பொழுது நல்ல நிலையில் இருக்கிறார் அந்த குடும்பத்தில் உள்ளவர்களும் நல்ல நிலையில் இருக்கின்றார்கள். இதனை எதற்கு சொல்லவருகிறேன் என்றால் முக்கால்வாசி பேருக்கு பாக்கியஸ்தானத்தில் அமரும் சூரியன் அவர்களின் தந்தையை பறித்துவிடுவார்.

தந்தை புண்ணியம் செய்து இருந்தால் வாரிசு நன்றாக வாழ்வார்கள். புண்ணியம் செய்யவில்லை என்றால் வாரிசுகளின் கதி சிக்கலாக தான் இருக்கும்.

ஒரு சில தந்தை புண்ணியம் சேர்க்காமல் இருப்பவர்களின் வாரிசும் நன்றாக தான் இருப்பார்கள். என்ன சேர்த்த சொத்தை விற்று நாளை தள்ளிக்கொண்டு இருப்பார்கள். ஒரு காலத்தில் முடிவு நிலை என்ற ஒன்று ஏற்பட்டு வீதிக்கு வருவார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, October 7, 2015

புண்ணியம்


வணக்கம்!
          பாக்கியஸ்தானம் என்பதை பார்த்தவுடன் அதில் இருந்து பல கருத்துக்கள் நமது எண்ணத்திற்க்கு வந்துக்கொண்டு இருக்கின்றன. அதில் ஒன்றை பார்க்கலாம்.

ஒரு குடும்பத்தில் இரண்டு அல்லது மூன்று சகோதரர்கள் இருந்தால் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் இருக்கின்றனர். ஒவ்வொருவரும் சொத்தை சரிபங்காக பிரித்துக்கொள்ளாமல் முடிந்தளவுக்கு அடுத்தவரை ஏமாற்றி எடுத்துவிடவேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

ஒரு சிலர் பங்கை எடுக்கமுடியவில்லை என்றால் கோர்ட் கேஷ் என்று போட்டு தானும் வாழாமல் பிறரையும் வாழாமல் வைத்து விடுகின்றனர். ஒருவருக்கு தந்தையை காட்டும் ஸ்தானம் என்பது பாக்கியஸ்தானம். தந்தை பிரச்சினையை செய்துக்கொண்டு இருக்கின்றார் என்றால் மகன் எப்படி நன்றாக வாழ்வார். தான் சேர்க்கும் சொத்தைவிட தான் சேர்க்கும் புண்ணியம் தான் தன் பிள்ளைகளை நன்றாக வாழவைக்கும்.

பல இடங்களில் என்னுடைய அனுபவத்தில் இதனை நான் பார்த்து இருக்கின்றேன். புண்ணியம் சேர்ப்பதைவிட சொத்து அதிகம் சேர்க்கிறார்கள். சொத்தை அடுத்தவர்களிடம் ஏமாற்றி வாங்காமல் உழைத்து வாங்குங்கள். நிறைய புண்ணியத்தை செய்யும்பொழுது உங்களின் வாரிசு நன்றாக வாழும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, October 6, 2015

அதிர்ஷ்டம் உங்கள் பக்கம்


வணக்கம்!
         ஒவ்வொருவரும் ஒரு நிலையை அடையவேண்டும் என்று போராடிக்கொண்டு இருப்பார்கள். உழைப்பை வைத்து அதனை அடையவேண்டும் என்று நினைப்பார்கள். ஒரு சிலருக்கு அதுவாகவே அமையும்.

உழைப்பு என்பது மிகப்பெரிய ஒன்று தான் ஆனால் சமுதாயத்தில் ஒரு சிலருக்கு அந்த உழைப்பை விட லக் அடித்து மிகப்பெரிய உச்சிற்க்கு சென்றுவிடுகிறார்கள். ஒரு சிலர் உழைத்தும் அந்த இடத்திற்க்கு செல்வதற்க்கு சிரமப்படுகிறார்கள். இது அனைத்தும் அவர் அவர்கள் வாங்கி வந்த வரம் என்று சொல்லுவார்கள்.

ஒரு சிலருக்கு அதிர்ஷ்டம் என்பது அவர்களின் ஜாதகத்திலேயே அமைந்துவிடுகிறது. ஒரு சிலருக்கு அமைவதில்லை. இதனை படிக்கும் உங்களுக்கு சோதிடம் நன்றாக தெரியும். அதில் திருமணத்தை காட்டும் ஏழாம் வீடு முக்கால்வாசி பேருக்கு பாதிக்கப்பட்டு இருக்கும் என்றும் உங்களுக்கு தெரியும். கெட்டுபோய் இருந்தாலும் எப்படியாவது திருமணத்தை நடத்துவதில்லையா அதைபோல் இந்த அதிர்ஷ்டத்தையும் நாம் முயற்சி செய்து எடுத்துக்கலாம்.

என்னங்க விளையாடுகின்றீர்களா என்று கேட்க தோன்றும் உண்மை தான் கொஞ்சம் கஷ்டப்பட்டு ஆன்மீக வழியில் உழைக்கவேண்டும். ஒரு கோடி லாட்டரி சீட்டை வாங்க வைப்பது பூர்வபுண்ணியம் அது அடிக்கவேண்டும் என்றால் பாக்கியஸ்தானம் முடிவு செய்யவேண்டும். அதிர்ஷ்டமும் அப்படி தான் பாக்கியஸ்தானத்தின் வழியாக அதனை நாம் அடைந்துவிடலாம்.

எப்படி அடைவது?

பாக்கியஸ்தானம் எதனை காட்டுகிறது நாம் வணங்கும் தெய்வம் மற்றும் வழிபாடுகளை காட்டுகிறது அல்லவா. நாம் சிவ வழிபாட்டை வைராக்கியதோடு செய்தோம் என்றால் நாம் நினைக்கும் பெரிய விசயம் நம் கைக்கு கிட்டும். 

பெரிய அளவில் நீங்கள் வரவேண்டும் என்றால் சிவவழிப்பாட்டை தான் செய்யவேண்டும். தொடர்ந்து வைராக்கியதோடு செய்யும்பொழுது நாம் அதனை அடைந்துவிடலாம். சிவன் நினைத்தால் பெரிய காரியத்தை எளிய வழியில் உங்களுக்கு நடத்திக்கொடுப்பார். வழிபாட்டிற்க்கும் உழைக்கவேண்டும். வழிபாட்டில் உழைத்தால் அதிர்ஷ்டத்தை பெறலாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

தர்மம்


ணக்கம்!
          பாக்கியஸ்தானத்தைப்பற்றி பார்த்து வருகிறோம் அதில் ஒரு தகவலை பற்றி பார்க்கலாம். ஒரு சில சோதிடர்கள் பாக்கியஸ்தானத்திற்க்கு பரிகாரம் செய்யமுடியாது அதுவாகவே கிடைத்தால் மட்டுமே உண்டு என்று சொல்லுவார்கள்.

அவர் அவர்களின் அனுபவத்தை வைத்து இதனை சொல்லலாம் ஆனால் இதற்கும் பரிகாரம் உண்டு. பாக்கியஸ்தானத்திற்க்கு தர்மஸ்தானம் என்ற பெயர் உண்டு. தர்மம் செய்து இந்த ஸ்தானத்தை நாம் நல்ல படியாக வேலை செய்ய வைக்கமுடியும்.

தர்மம் என்றவுடன் நமக்கு முதலில் ஞாபகம் வருவது பிச்சைக்காரர்கள் தான். உண்மையில் எனக்கு பிச்சைக்காரர்களுக்கு தர்மம் செய்வது பிடிக்காது. தமிழ்நாட்டில் பிச்சைக்காரர்கள் பிச்சை எடுத்து குடிப்பதற்க்கு தான் அதிகம் பயன்படுத்துக்கிறார்கள்.

ஒரு சில முருகன் கோவிலுக்கு நான் செல்லுவதே ஒரு சில நல்ல யாசகர்கள் அங்கு இருப்பார்கள். கடவுள் மேல் உள்ள ஈர்ப்பு காரணமாக இதனை செய்பவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு மட்டும் யாசகம் செய்வது உண்டு. 

ஒரு சில இடத்தில் வயதானவர்கள் தங்களின் முதுமை காரணமாக பிச்சை எடுப்பவர்களாக இருப்பார்கள் அவர்களுக்கு உதவலாம். அதோடு நம்மோடு பழகிக்கொண்டிருக்கும் நண்பர்களுக்கு அவசர காலத்திற்க்கு நாம் உதவி செய்வது கூட தர்மம் தான். 

அதிக தடை எந்தவிதத்திலும் முன்னேற்றம் இல்லை என்று நினைப்பவர்கள் முடிந்தளவு தர்ம காரியங்களில் ஈடுபட்டு அதன் வழியாக இதற்கு தீர்வு காணலாம். தர்மம் செய்யவதற்க்கு கூட வழி இல்லை என்று நினைப்பவர்கள் ஏதாவது ஒரு ஆலயத்திற்க்கு சென்று அங்கு நடைபெறும் பொதுப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளலாம். 

எனக்கு தெரிந்த ஒரு நண்பர் இருக்கின்றார் அவர் நல்ல வசதிபடைத்தவர். அவர் நிறைய தொழில் செய்கிறார். அவர் தினமும் அவரின் தொழில் செய்யும் இடத்தில் குறைந்தது ஐம்பது பேருக்கு அன்னதானம் செய்துவிடுவார். பணம் வந்தால் கூட நீங்கள் இப்படிப்பட்ட காரியங்களை செய்யும்பொழுது உங்களின் குடும்பம் மேலும் மேலும் வளரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, October 5, 2015

அம்மன் பூஜை படங்கள் பகுதி 3

வணக்கம்
         இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.






அம்மன் பூஜைக்கு என்று காணிக்கை அனுப்பிய நண்பர்களின் வேண்டுகோள் அம்மன் பூஜையின் பொழுது மனதாரா சொல்லப்பட்டுள்ளது. அனைவருக்கும் அம்மனின் அருள் கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 2

வணக்கம்!
                       இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.






அன்புடன்
ராஜேஷ்சுப்பு





அம்மன் பூஜை படங்கள் பகுதி 1

வணக்கம்!
           நமது பகுதியில் தொடர்ந்து மழை பெய்துக்கொண்டு இருக்கின்றது. இன்று காலையில் அம்மன் பூஜை நடத்திவிடவேண்டும் என்று முடிவு செய்தேன் ஆனால் காலையிலேயே மழை ஆரம்பித்துவிட்ட காரணத்தால் மதியம் இரண்டு மணிக்கு மழையோடு அம்மன் பூஜை நடத்தவேண்டியதாகிவிட்டது. மழையிலும் முடிந்தளவு முயற்சி செய்து அலங்கரித்தார்கள் நண்பர் இராஜ்குமார் மற்றும் கண்டியூர் இராமசுப்பிரமணியன் அவர்கள். 






அன்புடன்
ராஜேஷ்சுப்பு