Followers

Thursday, December 17, 2015

பாக்கியஸ்தானத்தில் சந்திரன்


ணக்கம்!
          பாக்கியஸ்தானத்தில் சந்திரன் இருந்தால் என்ன பலன் நடக்கும் என்பதைப்பற்றி சொல்லிருந்தேன். சந்திரனை பொறுத்தவரை பிறக்கும்பொழுது சந்திரனின் நிலையை கருத்தில் கொண்டு பலனை சொல்லவேண்டும்.

சந்திரன் தேய்பிறை சந்திரனாக இருந்தால் பலன் வேறுபடும். சந்திரன் வளர்பிறை சந்திரனாக இருந்தால் ஒரு பலனை கொடுக்கும். பொதுவாக சந்திரன் ஒன்பதில் இருக்கும்பொழுது அடிக்கடி கவிழ்த்துவிடும். எதிலும் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வைக்கவிடாது.

சந்திரனோடு எந்த கிரகமும் சேரகூடாது. அதாவது எந்த ஒரு தீயகிரகங்களுக்கம் சேர்ந்தால் சந்திரன் நல்ல பலனை கொடுக்காது. சந்திரனோடு சுபக்கிரகங்கள் சேர்ந்தால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

சந்திரனோடு தீயகிரகங்கள் சேரும்பொழுது தந்தைக்கும் பிரச்சினை அதோடு தாயின் நிலையும் பிரச்சினையாகிவிடும். சந்திரனோடு சனி சேர்ந்தால் தாயின் உயிருக்கும் கெடுதலை உண்டாக்கிவிடும்.

சந்திரனோடு செவ்வாய் சேரும்பொழுது தந்தைக்கும் ஜாதகனுக்கும் வெட்டு குத்து நடந்துவிடும். ஒரு சில கிராமங்களில் தந்தையை அவனின் பையன் கொன்றுவிடும் நிகழ்வுகள் எல்லாம் நடந்து இருக்கிறது.

சந்திரன் செவ்வாய் கூட்டணி உள்ள ஜாதகத்தை நான் பார்த்திருக்கிறேன். அவரின் தாய்க்கு விபத்து ஏற்பட்டு காயங்களோடு இருந்ததையும் காணமுடிகிறது.

சந்திரன் மற்றும் சுக்கிரன் கூட்டணி சேர்ந்தால் பல பெண்களோடு தொடர்புக்கொண்டு அதனாலும் பிரச்சினை உருவாகவதற்க்கு வாய்ப்பு இருக்கின்றது. 

சந்திரன் ராகு அல்லது கேது கூட்டணி அமைத்தால் அவன் ஒரு கிறுக்குபிடித்தவனாக இருக்கிறான். ஒரு சிலர் எதற்கும் அஞ்சாதவனாக இருக்கிறான்.

சந்திரன் ஒன்பதில் அமர்ந்து சந்திரனுக்கு நல்ல பார்வை கிடைத்தால் அவன் நல்ல தர்மசெயல்களை செய்பவனாக இருக்கிறான். பலருக்கு அவன் வழிகாட்டியாக இருக்கிறான்.

உங்களுக்கு சந்திரன் ஒன்பதில் அமர்ந்தால் அந்த நன்றாக இருந்தாலும் சரி தீமையாக இருந்தாலும் சரி சந்திரனுக்கு ஒரு பரிகாரத்தை செய்துவிடுங்கள். சந்திரன் எப்படி அமைந்தாலும் அவன் அவன் செய்யும் புண்ணியம் அவனை காக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: