Followers

Monday, December 21, 2015

எதனைப்பார்த்து வாழவேண்டும்?


வணக்கம்!
          பாக்கியஸ்தானத்தைப்பற்றி பார்த்து வந்தோம். மேலும் சில தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம். பாக்கியஸ்தானம் என்பது ஒரு பல விசயங்களை நமக்கு நன்றாக காட்டும் நமது அலட்சியபோக்கால் அதனை கவனிக்க தவறிவிடுவது உண்டு.

நமக்கு எல்லாம் கிடைத்து அதனால் நமக்கு பிரச்சினை வரும்பொழுது தான் நமக்கு பிரச்சினையே ஆரம்பம் ஆகும். நமக்கு நல்ல குழந்தைகளை கடவுள் கொடுத்திருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அந்த குழந்தை நன்றாக வளர்ந்து அது நம் பேச்சை கேட்டு அதற்கு ஒரு திருமணத்தை நடத்தி வைத்துவிட்டால் பாக்கியம் நன்றாக இருக்கின்றது என்று அர்த்தம்.

நமது பேச்சை கேட்காமல் அது இஷ்டத்திற்க்கு திருமணம் செய்துக்கொண்டு அது சென்றுவிட்டால் அப்பொழுது நமக்கு பாக்கியம் இல்லை என்று அர்த்தம். ஒருத்தருக்கு ஒரு பெண் குழந்தை மட்டும் தான் இருக்கின்றது என்று வைத்துக்கொள்வாேம். அந்த பெண்குழந்தையை அவர்கள் அதிகமான செல்லம் கொடுத்து வளர்த்துவருவார்கள். அது வயது வந்தவுடன் பெற்றோர்களின் கனவு அந்த பெண்ணுக்கு நல்ல வரனாக பார்த்து திருமணம் நடத்தி வைக்கவேண்டும் என்று நினைத்து இருப்பார்கள். அது திருமண வயதில் ஒருத்தனை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துவிட்டு வந்தால் அந்த பெற்றோர்களுக்கு எப்படி இருக்கும். அவர்களின் கனவு எல்லாம் சிதைந்துவிடும்.

சோதிட சாஸ்திரத்தில் ராகு கேது பார்த்து வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்ளுங்கள் என்பார்கள். இதன் அர்த்தம் என்ன என்றால் பாக்கியஸ்தானத்தை பார்த்து வாழகற்றுக்கொள்ளவேண்டும் என்பது தான். ராகு கேது பாக்கியஸ்தானத்தை அதிகமாக நிர்வகிக்கும் ஆற்றல் பெற்ற கிரகங்கள். இதன் நிலையை அறிந்து நாம் வாழவேண்டும்.

என்னிடம் வரும் சோதிடம் பார்க்கும் நண்பர்களிடம் சொல்லுவது நான் உங்களுக்கு பரிகாரம் செய்கிறேன் அதற்கு கொஞ்சம் அதிகமாக பணம் தேவைப்படும். இதற்கு நீங்கள் சம்மதித்தல் நான் செய்கிறேன் என்று சொல்லுவேன். அவர்கள் சம்மதித்தால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நான் செய்வது அவர்களின் பூர்வபுண்ணியம் மற்றும் பாக்கியஸ்தானத்திற்க்கு அதிக முக்கியதுவம் கொடுத்து செய்வேன்.

பாக்கியஸ்தானத்திற்க்கு மட்டும் இப்பொழுது ஒரு சிலருக்கு பரிகாரம் செய்து இருக்கிறேன். அவர்களுக்கு நிரந்தரமான ஒரு வேலை அல்லது நிரந்தரமான ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுத்து இருக்கிறேன். இதனை ஏன் சொல்லுகிறேன் என்றால் பூர்வபுண்ணியம் மற்றும் பாக்கியஸ்தானத்தையும் நாம் நன்றாக கவனித்துவிட்டால் வாழ்வு நன்றாக அமைந்துவிடும்.

ராகு கேதுவை பார்த்து வாழ்வை வாழகற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லுவதும் இது தான். பாக்கியஸ்தானத்தை பார்த்து நாம் வாழ்ந்துவிட்டால் போதும். எந்த பிரச்சினையும் இல்லாமல் சென்றுக்கொண்டு இருக்கும்.

அவர் அவர்களின் ஜாதகத்தில் பாக்கியஸ்தானத்தில் என்ன தான் இருக்கின்றது என்பதை பாருங்கள். அதோடு ராகு கேதுவும் எங்கு இருக்கின்றது என்பதை பாருங்கள். நீங்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கின்ற வாழ்வு என்ன என்பது புரியும். எப்படி வாழவேண்டும் என்ற உங்களின் கனவோடு உங்களின் ஜாதகத்தை ஒப்பிட்டு பாருங்கள். உங்களின் கனவு நடக்குமா என்பது தெரியும். உங்களின் கனவுக்கு பிரச்சினை வருகின்றது என்றால் என்ன செய்யவேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

Ashok said...

Sir, Not doing bad to others is enough to activate Bhagya and poorva punya sthanam.