Followers

Tuesday, December 29, 2015

புத்தாண்டு நாளில் செய்யவேண்டியவை


வணக்கம்!
        புத்தாண்டை வரவேற்க நமது நண்பர்கள் திட்டமிட்டு இருப்பார்கள். நமது பதிவை அதிக இளைஞர்கள் படிப்பதால் இந்த பதிவை அவர்களுக்கு அளிக்கவேண்டும் என்று தருகிறேன்.

புத்தாண்டு கொண்டாட்டத்தை அதிகமாக கொண்டாட நினைக்காதீர்கள். அமைதியாக கொண்டாடுங்கள். பிறர்க்கு தொந்தரவு கொடுக்காமல் புத்தாண்டை கொண்டாடுங்கள். எதையும் அதிகமாக செய்யவேண்டும் என்று நினைக்காதீர்கள் நிதானமாக இருங்கள்.

முடிந்தளவுக்கு புத்தாண்டு அன்று பயணம் செய்வதை தவிர்க்க பாருங்கள். எங்கு பார்த்தாலும் கூட்டமாக இருக்கும் கூட்டமான இடத்திற்க்கு செல்வதை தவிர்த்துவிடுங்கள்.

ஒரு முறை நான் சென்னையில் இருக்கும்பொழுது புத்தாண்டு அன்று கோவிலுக்கு செல்லலாம் என்று முடிவு எடுத்து ஒரு இடத்திற்க்கு சென்றேன். அந்த இடத்தில் ஒரு பிள்ளையார் கோவில் இருந்தது. பிள்ளையார் கோவிலில் உள்ள விநாயகரை தரிசிக்க நீண்ட வரிசை இருந்தது. 

கொஞ்ச தூரத்தில் ஒரு கோவில் தென்பட்டது. அந்த கோவிலுக்கு செல்லலாம் என்று சென்றேன். அதுவும் பிள்ளையார் காேவில் தான் ஆனால் அங்கு ஒருத்தரும் வழிபடவில்லை. உடனே நான் சென்று வழிபட்டு வந்தேன்.அந்த வருடத்தில் இருந்து நல்ல மாற்றம் வாழ்க்கையில் தெரிய ஆரம்பித்தது.

புத்தாண்டு அன்று நமது நண்பர்கள் அனைவரும் அதிக கூட்டம் உள்ள கோவிலை தரிசனம் செய்வதைவிட சிறிதாக கூட்டம் இல்லாத கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். குலதெய்வம் அருகில் இருந்தால் குலதெய்வத்தை வணங்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: