Followers

Wednesday, January 13, 2016

சிஷ்யன்


ணக்கம்!
          குருவைப்பற்றி பார்த்தோம் தற்பொழுது சிஷ்யன் நிலையை பார்க்கலாம். உலகத்தில் உள்ள குருக்கள் கற்றுக்கொடுத்தாலும் அதனை புரிந்துக்கொள்ளாத நிலையில் சிஷ்யன்களும் இருக்கின்றார்கள். 

சிஷ்யன்கள் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து குருவிடம் செல்லுகின்றனர். அதனை நிறைவேற்றுவதற்க்குள் குருவைப்பற்றி தவறாக பேச ஆரம்பித்துவிடுகின்றனர். ஒன்றை எதிர்பார்த்து செல்லும்பொழுது மற்றொன்று அங்கே கிடைக்கும்பொழுது எதிர்பார்த்தை விட்டுவிடுகிறார்கள்.

உலகத்தில் உள்ள குருக்களை எல்லாம் அவர்களின் சிஷ்யன்கள் தான் கொலை செய்து இருக்கிறார்கள். எந்த துறையாக இருந்தாலும் சரி அதனை எடுத்து பார்த்தால் அந்த துறையில் உள்ள அவரது சிஷ்யன்கள் கொலை செய்து இருப்பார்கள்.

சரணாகதி என்பது சிஷ்யன்களிடம் கிடையாது. தன்னை அர்பணிக்கும் குணம் இருந்தால் குரு அனைத்தையும் கொடுக்கும் விதத்தில் செயல்படுவார். பத்து நாள் அவரிடம் படித்துவிட்டு அவருகே பாடம் நடத்தும் நிலையில் சிஷ்யன்கள் ஈடுபடுவார்கள். உங்களுக்கே ஒன்றும் தெரியாது என்று சொல்லிவிடுவார்கள். பிறகு எங்கிருந்து குரு கற்றுக்கொடுப்பது.

நமக்கு அவசரகதி அல்லது சரணாகதி இல்லாத தன்மையால் தான் நம்மால் அடிபணிந்து படிக்கமுடிவதில்லை. எதனையும் கற்கமுடியாமல் திணறவேண்டியுள்ள நிலை ஏற்படுகிறது.

சோதிடத்தில் பாக்கியஸ்தானம் சொல்லுவதும் இதுதான் உனக்கு சரணாகதி தன்மை இருந்தால் ஒரு நல்ல குரு உனக்கு அமைந்துவிடுவார். அது இல்லை என்றால் சிக்கல் தான்.

உங்களின் பாக்கியஸ்தானம் எப்படி இருந்தாலும் உங்களின் பொறுமை தன்மை மற்றும் சரணாகதி தன்மை இருந்தால் நன்றாக அனைத்தையும் கற்றுவிடலாம். அது இல்லை என்றால் தான் பிரச்சினை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: