Followers

Wednesday, January 13, 2016

பண்டிகையில் உள்ள அர்த்தம்


வணக்கம்!
          ஒவ்வொரு இந்துக்களின் பண்டிகையும் ஏதாவது ஒரு தாந்திரியத்தோடு சம்பந்தப்பட்டு வைத்து இருப்பார்கள். நம்ம ஆட்கள் அதனை மறந்துவிட்டு வேறு ஏதாே ஒன்றை செய்துக்கொண்டு இருப்பார்கள்.

இந்துகள் பண்டிகையை அதிகம் வைத்தற்க்கு காரணம் ஏழை எளிய மக்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் முதல் எண்ணமாக இருக்கும். அதோடு ஒரு சில உள்கருத்துக்களும் இருக்கும். அதனை எல்லாம் புரிந்துக்கொண்டு நாம் பண்டிகையை கொண்டாடும்பொழுது நம் பண்டிகை நல்ல அர்த்ததோடு விளங்கும். நமக்கும் நன்மை அதிகமாக கிடைக்கும்.

உதாரணத்திற்க்கு போகிபண்டிகையை பார்த்தால் இருக்கின்ற அனைத்து பொருட்களையும் கொழுத்திவிடுகிறார்கள். தீய எண்ணத்தை கொளுத்து என்று தான் இதனை வைத்திருக்கவேண்டும். நம்ம ஆளுங்க டயரை கொழுத்திக்கொண்டு இருக்கிறார்கள். 

ஒரு வருடத்தில் சேர்ந்த பொருட்களை எல்லாம் வீட்டில் இருந்து எடுத்து போட்டுவிட்டு வீட்டை சுத்தம் செய்யும் ஒரு நிகழ்வாகவே கிராமபுறங்களில் இதனை கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு பண்டிகையிலும் உள்ள அர்த்தத்தை எடுத்துக்கொண்டு அதன்படி செயல்படும்பொழுது அனைத்து பண்டிகையும் மகிழ்வோடு இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: