Followers

Monday, January 4, 2016

தர்மசிந்தனை


வணக்கம்!
          பல வருடங்கள் நான் இந்த தொழில் செய்து வருகிறேன். நான் பார்த்து வளர்ந்த குடும்பங்கள் கூட நல்ல நிலைமையில் இருந்த குடும்பங்கள் இன்று வறுமையில் இருக்கின்றன. ஒரு சில குடும்பங்கள் சரிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றன. இது எதனால் என்று பல நேரத்தில் நான் சிந்தித்து உண்டு. அப்படி அவர்களை பார்க்கும்பொழுது ஒரு கருத்து பிடிப்பட்டது உண்டு.

பாக்கியஸ்தானத்தில் சொல்லப்பட்ட தர்மம் என்ற ஒன்றை யாரும் செய்யாமல் இருந்து வந்தது தான் அது என்பது எனக்கு பிடிப்பட்டது. அவர்கள் சம்பாதித்த சொத்துகளை கூட அவர்கள் கையைவிட்டு சென்று இருப்பது தெரிய வருகிறது. 

சாமர்த்தியமாக சம்பாதிக்கின்றனர். சம்பாதித்த பொருளை கடைசி வரை வைத்து காப்பாற்ற தெரிந்து வைத்திருக்கவேண்டும். தர்மசிந்தனை இல்லாமல் செய்யும் எந்த ஒரு செயலும் வெற்றி பெற்றது கிடையாது. நீங்கள் சாமர்த்தியமாக சம்பாதித்தாலும் அதில் தர்ம சிந்தனையும் சேர்க்கும்பொழுது உங்களின் பணம் கடைசி வரை உங்களிடம் இருக்கும்.

நம்ம ஆளுங்க எச்சில் கையில் காக்கையை விரட்டமாட்டார்கள். அப்படி இருந்தால் கொஞ்ச நாளில் நம்ம சொத்து அழிவது நம் கண்களை பார்க்கவேண்டிய நிலை ஏற்படும்.

சோதிடத்தை எழுதியவன் சரியாக தான் எழுதியிருப்பான் பாக்கியஸ்தானத்தில் தர்மசிந்தனையை சேர்த்துவிட்டுடான். தர்மம் செய்தால் உனக்கு தடை ஏற்படாது. தர்மம் செய்யாமல் இருந்தால் தடை ஏற்பட்டு உனக்கு காரியம் வெற்றி பெறாது என்று வைத்திருக்கார்கள். 

சாமர்த்தியம் உங்களின் திறமை. தர்மகுணம் என்பது கடவுள் கொடுக்கும் குணம். சாமர்த்தியமும் தர்மகுணமும் சேரும்பொழுது உங்களின் வாழ்க்கையில் என்றும் சந்தோஷமே.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: