Followers

Thursday, January 21, 2016

பாக்கியஸ்தானம்


ணக்கம்!
          பாக்கியஸ்தான அதிபதியும் ஏழாவது வீட்டு அதிபதியும் சம்பந்தப்படும்பொழுது நல்ல வாழ்க்கை அமையும். கணவன் மனைவி இருவரும் சந்தோஷமாக வாழ்வார்கள்.

இரண்டு அதிபதியும் கெட்டாலும் நமது சமுதாயம் இருவரையும் வாழவைக்க பல நல்லதை செய்யும். அதாவது இரண்டு பேருக்கும் பிரச்சினை வந்தால் அதனை சமாதானம் செய்து வைத்து அவர்களை வாழவைக்கும். 

தற்பொழுது இந்த கலாச்சாரம் கொஞ்சம் மாறுதல் அடைந்து வருகிறது என்றே சொல்லவேண்டும். கணவன் மனைவியை பிரிப்பதற்க்கு இரண்டு வீட்டார்களும் முயன்றுவருகின்றனர். நாகரீக சமுதாயம் என்று சொல்லிக்கொண்டு இதனை செய்து வருகின்றனர்.

நகரத்தில் தான் இப்படி என்றால் கிராமத்திலும் இது பரவலாக செய்ய ஆரம்பித்துவிட்டனர். கிராமத்தையும் இது விட்டுவைக்கவில்லை. நகரத்தில் கோர்ட்க்கு செல்லுகின்றனர். கிராமத்தில் பஞ்சாயத்திற்க்கு செல்கின்றனர். அவ்வளவு தான் வித்தியாசம் என்று சொல்லவேண்டும்.

எங்கு வசித்தாலும் பெரியவர்கள் இன்றைய சமுதாயத்திற்க்கு நல்லதை செய்யவேண்டும். சிறியவர்களுக்கு நல்ல அறிவுரை வழங்கி அவர்களின் வாழ்விற்க்கு உறுதுணையாக இருந்தால் நல்லது. 

விதி அடிப்பது ஒரு வலி என்றால் பெரியவர்கள் அடிப்பது அதிகமாக இருக்கின்றது. கிரகங்கள் எப்படி இருந்தாலும் வழி காட்டுபவர் நன்றாக இருந்தால் நல்ல வாழ்க்கை வாழலாம்.


பல ஊர்களுக்கு பயணம் செய்யவேண்டிய அவசியம் இருக்கின்றது. ஒரு வாரம் சென்ற பிறகு ஒவ்வொரு ஊருக்காக வரவிருக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

nallur parames said...

Enakku 7,8,9 aam adhipadhikal 3 aa idathil ulladhu.