Followers

Tuesday, May 3, 2016

இயற்கையான ஆனந்தம்


வணக்கம்!
          எனது இடத்தில் ஹோமம் செய்வதாக இருந்தால் நான் அதனை இயற்கை முறையில் செய்வது உண்டு. எனது வீடு தென்னை கூற்று மேய்ந்த ஒரு வீடு. அதாவது கூரை வீடாக இருக்கின்றது. அந்த காலத்தில் இருந்து நான் வசிப்பது தென்னைகூரை வீடு தான். 

கீழ்தரை தற்பொழுது வெறும் மண் கொண்டு பூசப்பட்டு பசு சாணம் போட்டு பூசி இருக்கும். நான் பசு மாடு வளர்த்து வளர்கிறேன். அதனால் இயற்கையான சாணத்தை பயன்படுத்திக்கொள்கிறேன். பசு மாடு பல வழிகளில் எனக்கு உதவுகிறது. 

என்னை சந்தித்து ஏதாவது பூஜை செய்யவேண்டும் என்று வருபவர்களுக்கு இந்த இயற்கையான முறையில் உள்ள இடத்தில் வைத்து பூஜை செய்துக்கொடுப்பது உண்டு. இயற்கையான தெய்வம் இயற்கையான முறையில் பூஜை செய்யும்பொழுது வலுவாக வேலை செய்யும்.

நம்மை தேடி வரும் நண்பர்கள் பல பேர் நகரத்தில் வசிப்பவர்களாக இருப்பார்கள். அவர்கள் இதனை எல்லாம் பார்க்கும்பொழுது என்னிடம் சொல்லுவார்கள். இதனை எல்லாம் நாங்கள் பார்த்தது உண்டு ஆனால் இதற்குள் வந்தது கிடையாது என்பார்கள்.

நகரத்தில் நீங்கள் வாழ்ந்தாலும் இயற்கையான ஒரு வாழ்க்கையை கொஞ்சம் வாழ்ந்து பாருங்கள். அதன் அருமை உங்களுக்கு புரியும். நமது அம்மன் கோவிலுக்கு வந்தால் உலகத்தில் எங்கும் இல்லாத ஒரு ஆனந்தத்தை நீங்கள் உணரலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: