Followers

Friday, September 9, 2016

அமைதி என்னும் மார்க்கம்


ணக்கம்!
          அமைதியாக இருக்கும் மனிதன் தான் அதிகம் சாதிக்கிறான். அமைதியாக இல்லாத மனிதன் அதிகம் சாதிப்பதில்லை என்பது உங்களின் ஊரில் அல்லது உங்களோடு பழகிக்கொண்டு இருப்பவர்களை பார்த்தாலே உங்களுக்கு தெரியும்.

பொறுமை இல்லாத மனிதன் அதிகம் சாதிப்பதில்லை. பொறுமை இருப்பதற்க்கும் கிரகங்கள் தான் துணை புரிகின்றன அப்படி கிரகங்கள் துணை புரியவில்லை என்றாலும் நாமே அதனை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

பொறுமையாக இருப்பதற்க்கு ஆன்மீகம் துணை புரியும் அதுவும் பழக பழக தான் அந்த பொறுமை கைகூடும். எந்த ஒரு சூழ்நிலையிலும் பொறுமையாக  இருக்க கற்றுக்கொண்டால் போதும் இறைவனிடம் நீங்கள் கேட்கும் வரம் கிடைத்துவிடும்.

உலகத்தில் உள்ள அனைத்து ஞானிகளும் சொல்லியுள்ளார்கள். கடவுளிடம் நாம் பேசக்கூடிய மொழி மவுனம் தான் என்று சொல்லியுள்ளார்கள். எப்பொழுதும் மவுனமாக இருப்பவனிடம் நிறைய சக்தி இருக்கின்றது.

தோஷம் அதிகம் இருப்பவர்களுக்கு அமைதி என்பது இருக்காது. எதையாவது செய்துக்கொண்டே இருப்பார்கள். அடுத்தவர்களை சீண்டிக்கொண்டே இருப்பார்கள் தானும் அமைதியாக இல்லாமல் பிறரையும் அமைதியாக இல்லாமல் செய்வார்கள். உங்களின் தோஷத்திற்க்கு நீங்கள் அடிமை என்றால் நீங்கள் எதையாவது செய்யுங்கள். தோஷத்திற்க்கு அடிமையில்லை என்றால் அமைதியாக இருங்கள் உலகம் உங்களுக்கு தான்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: