Followers

Tuesday, October 11, 2016

செவ்வாயும் காளியும்


ணக்கம்!
          பெரும்பாலும் செவ்வாய்தோஷம் இருப்பவர்களுக்கு கோபம் அதிகமாக இருக்கும் என்று பார்த்திருக்கிறோம். செவ்வாய்தோஷத்திற்க்கு காளிகோவிலுக்கு சென்று தான் வழிபாடு செய்யவேண்டும் என்று ஒரு சாரர் சொல்லுவார்கள். செவ்வாய்கிழமையில் செவ்வாய்தோஷத்திற்க்கு என்று காளிகோவிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். 

செவ்வாய் காளி போன்றவை அனைத்தும் படுவேகமான சக்தி உடையவை. செவ்வாய் வேகம் அதிகம். செவ்வாய் கிரகத்தின் வேகத்தை குறைக்க அதைப்போல் பலமடங்கு வேகமான காளிதெய்வத்தின் ஆற்றலை வைத்து செவ்வாயின் வேகத்தை குறைப்பார்கள்.

செவ்வாய் ராகு போன்ற கிரகங்கள் அதிகவேகம் இருப்பதால் தான் அதனை வேகமான தெய்வங்களை வைத்து சாந்தப்படுத்தினார்கள். செவ்வாய்கிழமையில் ராகு காலத்தில் துர்கைக்கு என்று பூஜை நடைபெறும் அல்லவா. 

வேகமான விசயங்கள் அனைத்தும் செவ்வாய்கிழமையில் தான் இருக்கும். சக்தியை பற்றி அறிந்தவர்களுக்கு செவ்வாய்கிழமையின் வேகம் என்ன என்று தெரியும். அந்த நாளில் எப்படி சக்தி அதிகமாக இருக்கின்றது என்பதையும் தெரியும்.

இதனை உங்களுக்கு சொல்லுவது எதற்க்காக என்றால் செவ்வாய்கிழமையில் நாம் வேகமாக இருக்கும் செயலை தேர்ந்தெடுத்து செய்யலாம். அதோடு செவ்வாய்கிரகத்தின் வேகத்தை குறைக்க செவ்வாய்கிழமை அன்று காளிதெய்வத்தை வணங்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: