Followers

Tuesday, October 11, 2016

செவ்வாய்


ணக்கம்!
          இன்றைய காலத்தில் செவ்வாய் கிரகத்திற்க்கு என்று செய்வதை நம்ம மக்கள் ஒழுங்காக செய்வதில்லை என்பது நிறைய அனுபவத்தில் இருந்து பார்த்து இருக்கிறேன். தமிழ்கடவுள் தற்பொழுது மலையாள கடவுளாக மாறிவிட்டார் என்று கூட நான் பதிவில் சொல்லிருக்கிறேன்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை முருகனுக்கு நம்ம ஆட்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தார்கள். தற்பொழுது தான் நம்ம ஆட்கள் கொஞ்சம் அப்படியே மாறி கர்நாடக பக்கம் அல்லது கேரளா பக்கம் உள்ள கோவிலுக்கு செல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

சாய்பாபா எல்லாம் தற்பொழுது பிரபலமாகிறார் என்றால் சும்மாவாக இருக்கமுடியும். மனிதன் எதனையோ தேடி அலைகிறான் என்று மட்டும் சொல்லலாம். எதனை வேண்டுமானாலும் வணங்குங்கள் ஆனால் நம்ம கடவுளை மட்டும் மறக்ககூடாது. 

இன்றைய காலத்தில் வயதிற்க்கு வந்தவுடன் பெண்கள் பவளம் என்பது எல்லாம் அணிவதில்லை. ஆனால் அந்த காலத்தில் பவளம் மட்டும் அணிந்து அனைவரும் குழந்தைகளை பெற்றார்கள். இந்த காலத்தில் பவளம் என்பது எல்லாம் ஒருத்தரும் அணிவதில்லை என்று நினைக்கிறேன்.

பெண்களுக்கு செவ்வாய் கிரகத்தின் தயவு அதிகம் தேவை. இதனை உணர்ந்த நம் முன்னோர்கள் பவளத்தை கழுத்தில் மாட்டிவிட்டார்கள். பவளம் கழுத்தில் அணிந்தால் கண்டிப்பாக அவர்களுக்கு மாதவிடாய் பிரச்சினை என்பது வராது.இன்றைய காலத்தில் பவளத்தை நாம் அணிய சொன்னால் என்ன சொல்லுவார்கள் என்பதை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை நீங்களே புரிந்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: