Followers

Tuesday, November 8, 2016

உங்களின் வீடு எந்த திசையில்?


ணக்கம்!
         ஒரு நண்பர் வீட்டு வாசல் எந்த திசையில் அமையலாம் என்று கேட்டார். வீடு வாங்கும் அல்லது கட்டும் நபர்கள் உங்களின் வீடுகளை தேர்ந்தெடுப்பது உங்களின் ராசிப்படி தேர்ந்தெடுத்தால் நல்லது என்பார்கள்.

ஒரு வீட்டில் நான்கு பேர் இருந்தால் ஒவ்வொருவருக்கும் ஒரு ராசி இருக்கும் எதனை பார்த்து நாம் வாங்குவது என்றும் கேட்கலாம். ஏதோ கொஞ்சம் பார்க்கலாம் முழுவதுமாக பார்க்கமுடியாது.

வாஸ்துபடி கிழக்கு மற்றும் வடக்கு வாசற்படி மிக உகந்தது என்பார்கள். நீங்கள் வீடு வாங்கும்பொழுது இப்படிப்பட்ட வாசல் அமைந்தால் நல்லது. அப்படி இல்லை என்றால் யார் பெயருக்கு வீடு வாங்குகிறீர்களோ அந்த ராசிபடி வீடு வாங்குங்கள்.

மேஷம் =  கிழக்கு வாசல்
ரிஷபம் =  தெற்கு வாசல்
மிதுனம் = மேற்கு வாசல்

கடகம்   = வடக்கு வாசல்
சிம்மம்  =  கிழக்கு வாசல்
கன்னி  =  தெற்கு வாசல்

துலாம்  = மேற்கு வாசல்
விருச்சிகம் = வடக்கு வாசல்
தனுசு  =  கிழக்கு வாசல்

மகரம்  =  தெற்கு வாசல்
கும்பம்  = மேற்கு வாசல்
மீனம்   = வடக்கு வாசல்

நீங்கள் எந்த திசையில் வீடு கட்டினாலும் உங்களின் வீடுகளுக்கு ஆன்மீகவாதிகள் வரும்பொழுது உங்களின் வீடு லட்சுமிகரமாக இருக்கும் என்பது எனது அனுபவத்தில் தெரிந்த ஒன்று.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: