Followers

Monday, November 7, 2016

கோவிலில் தீபம்


ணக்கம்!
          பொதுகாரியம் செய்வதற்க்கு கூட மனசு என்பது வேண்டும். மனசு இல்லை என்றால் பொதுகாரியம் செய்யமுடியாது. நடந்து முடிந்த செவ்வாய் பரிகாரத்திற்க்கு கூட  என் மனசு வைத்து நல்லது நடக்கவேண்டும் என்று செய்திருக்கிறேன். அது கண்டிப்பாக அனைவருக்கும் நல்லது நடத்திக்கொடுக்கும்.

காலம் கடந்து செவ்வாய் பரிகாரத்திற்க்கு அனுப்பி வைத்த ஜாதகங்களுக்கு என்னால் செய்யமுடியவில்லை அதனை அவர்களுக்கு நான் மெயிலில் தெரிவித்துவிட்டேன் மறுமுறை செவ்வாய் பரிகாரம் செய்யும்பொழுது தெரிவிக்கிறேன் அந்த நேரத்தில் செய்துக்கொள்ளலாம்.

எந்த கிரகத்திற்க்கு நீங்கள் பரிகாரம் செய்தாலும் சரி செய்யாவிட்டாலும் சரி. சந்திரன் என்ற கிரகத்தை தான் நீங்கள் சரிசெய்யவேண்டும் என்பது எனது கருத்து. சந்திரன் வழியாக தான் அனைத்து கிரகங்களும் நல்லது தீயதை தருகிறது. சந்திரன் சரியில்லை என்றால் கொடுக்கும் நல்ல பலன் கூட கிடைக்காது.

சந்திரனுக்கு பரிகாரம் செய்யவேண்டுமா என்று கேட்கலாம். சந்திரனுக்கு பரிகாரம் நிறைய சொல்லிருக்கிறேன். அப்படி இல்லை என்றாலும் உங்களின் ராசி எந்த ராசி என்று பார்த்து அந்த ராசி அதிபதி வரும்நாளில் அவர்களுக்கு ஒரு தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம்.

இன்றைய காலத்தில் பெரும்பாலும் பெரிய கோவில்களில் தீபம் ஏற்றுவதற்க்கு என்று ஒதுக்கப்பட்டு இருக்கும் இடம் கோவிலுக்கு வெளியில் வைத்திருக்கிறார். அது ஒரு தவறான செயல். அப்படி வைத்திருக்கும் கோவிலில் நீங்கள் தீபம் ஏற்றவேண்டாம்.

உங்களின் பகுதியில் ஒரு சின்ன கோவில் இருந்தாலும் அந்த கோவிலில் மூலவருக்கு முன்பாக தீபம் ஏற்றுவது போல் இருந்தால் அந்த கோவிலில் ஏற்றுங்கள். அது உங்களுக்கு நல்லதை தரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: