Followers

Monday, February 6, 2017

திருமண வாழ்வு


வணக்கம்
          நேற்று ஒரு நண்பரோடு பேசும்பொழுது திருமணம் நடைபெறுவற்க்கு நாம் நிறைய கோவில்களை வணங்குகிறோம். அதே மாதிரி திருமணவாழ்வு நன்றாக இருப்பதற்க்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்டார். இன்று நல்ல முகூர்த்தம் இந்த தகவல்களை சொல்லிவிடவேண்டும் என்று எழுதிவிட்டேன்.

திருமணவாழ்வில் இரண்டு பேரும் சண்டை சச்சரவு இல்லாமல் செல்லவேண்டும். திருமணவாழ்வில் சண்டை இல்லாமல் இல்லை ஆனால் அந்த சண்டை முற்றி அது விவாகாரத்து வரை செல்லகூடாது. 

திருமணம் நடைபெறும் இளம்தம்பதிகளிடம் நீங்கள் குடும்பத்தின் பாரம்பரியத்தை சொல்லி இப்படி தான் நடந்துக்கொள்ளவேண்டும் என்று சொல்லிவிடவேண்டும். குடும்பத்தின் பாரம்பரியத்தை சொன்னால் ஒரளவு அதன்படி நன்றாக ஒழுக்கமாக வாழவேண்டும் என்று நினைப்பார்கள்.

திருமணவாழ்வில் பிரிவை ஏற்படுத்துவது அதிகம் ஆறாவது வீடு தான் அதுபோல விரையவீடும் செய்யும். இந்த கிரகங்கள் வலுபெறுகிறதா என்பதை அடிக்கடி ஜாதகத்தை கண்காணித்தால் போதும்.

இறைவனுக்கு கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடத்துவார்கள். அதனை நேரில் கண்டு தரிசனம் செய்யவேண்டும். அதோடு பிரதோஷ தினத்தில் பிரதோஷ வேளையில் சிவன் கோவிலில் இருந்தால் திருமணவாழ்வில் பிரச்சினை வராது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு




No comments: