Followers

Friday, March 10, 2017

பரிகாரம்


வணக்கம்!
          நேற்று ஒரு நண்பரோடு பேசிக்கொண்டு இருக்கும்பொழுது பரிகாரத்தைப்பற்றி பேச்சு வந்தது. அதனன வைத்தே இந்த பதிவை கொடுத்துவிடலாம் என்று ஒரு பதிவை எழுதிவிட்டேன்.

ஒருவருக்கு பரிகாரம் பலிக்காமல் போவதற்க்கு முதற்காரணம் பாக்கியாதிபதி என்று சொல்லக்கூடிய ஒன்பதாவது வீட்டு அதிபதி சரியில்லாமல் ஜாதகத்தில் அமருவது தான் பரிகாரம் பலிக்காமல் போய்விடுவதற்க்கு காரணமாக இருக்கும்.

ஒன்பதாவது வீட்டு அதிபதி யார் என்று பார்த்து அவருக்கு சரியான முறையில் வழிபாட்டை செய்யவேண்டும். உங்களின் ஜாதகத்திற்க்கு தகுந்தமாதிரி அந்த வழிபாட்டை செய்யவேண்டும். 

சோதிடத்தில் சொல்லப்படுகின்ற பரிகாரம் நடைமுறையில் பலிக்காமல் போவதற்க்கு நிறைய காரணம் இருக்கின்றது. சனிக்கிரகம் என்றால் உடனே பைரவர் அல்லது சாஸ்தா என்று சொல்லிவிடுவார்கள். இதனை எல்லாம் கும்பிட்டால் ஒன்றும் நடக்காது என்பது தான் உண்மையான விசயம். ஒவ்வொரு கிரகத்திற்க்கு தகுந்தமாதிரியான அனுபவத்தில் ஒத்துவரக்கூடிய தேவதைகளை வணங்கினால் பலன் தரும்.

கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்யப்படுவது எல்லாம் வீண் என்றே சொல்லலாம். பரிகாரகோவில்கள் என்று சொல்லக்ககூடிய கோவில்கள் எல்லாம் பரிகாரகோவில்களே கிடையாது என்பது தான் உண்மை.

சிற்பசாஸ்திரத்தில் பரிகாரகோவில்கள் என்றால் இரண்டு பாம்புக்கு நடுவில் சூரியன் அல்லது சந்திரன் இருக்கவேண்டும். இந்த விதிகளுக்குள் இருந்தால் மட்டுமே அது பரிகாரகோவில் என்று சொல்லவேண்டும் என்று சொல்லிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இப்படி இருக்கின்ற கோவில்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

நன்றாக ஜாதகத்தை பார்த்து இந்த ஜாதகத்தில் இது தான் பிரச்சினை. இந்த பிரச்சினைக்கு இப்படி தான் பரிகாரம் செய்யவேண்டும் என்று யூகித்து செய்தால் பலன் கண்டிப்பாக கொடுக்கும். அதோடு எங்களை போல உள்ள ஆட்களிடம் பரிகாரம் கண்டிப்பாக பலன்கொடுக்கும். இதற்கு காரணம் இதனையே தொழிலாக செய்துக்கொண்டு இருப்பதால் தான் பலன் கொடுக்கும் என்று சொல்லுகிறேன்.

சந்திரன் பரிகாரத்திற்க்கு தங்களின் ஜாதகத்தை அனுப்பிவிட்டீர்களா. உடனே அனுப்பி வையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: