Followers

Saturday, April 1, 2017

வழிகாட்டிய சித்தர்கள்


ணக்கம்!
         சித்தர்கள் உருவாக்கிய கோவில்கள் அதிகப்பட்சம் ஒன்றை செய்வார்கள். சிலைக்கு அபிஷேகம் செய்யும்பொழுது அந்த சிலைக்கு மேல் இருந்து அபிஷேகம் செய்வது போல் ஒரு ஏற்பாட்டை செய்து வைப்பார்கள். 

சிலைக்கு அபிஷேகம் செய்யும்பொழுது சிலைக்கு அருகில் ஒரு மேடையை உருவாக்கி வைத்திருப்பார்கள். அதில் ஏறி நின்றுக்கொண்டு அபிஷேகம் செய்வது போல் இருக்கும். சித்தர்கள் உருவாக்கிய கோவிலில் மட்டும் இந்த ஏற்பாடு இருக்கும்.

நீங்கள் செல்லும் கோவில்களில் எல்லாம் நன்றாக கவனித்து பாருங்கள். அந்த கோவில் அர்ச்சகர் கால் நொண்டிக்கொண்டு இருப்பார். இது ஏன் என்றால் சாமிக்கு அபிஷேகம் செய்யும்பொழுது இவர்களின் கால்களுக்கு ஊற்றிக்கொள்வார்கள். அபிஷேகம் செய்யும்பொழுது அந்த அபிஷேக நீர் இவர்களின் கால்களில் படும். இப்படிபடுவது தவறு. இதனை அறிந்து சித்தர்கள் அப்பொழுதே தனியாக மேடை ஒன்றை நிறுவி அதில் நின்றுக்கொண்டு அபிஷேகத்தை செய்ய சொன்னார்கள்.

மேலே உள்ள தகவல் உங்களுக்கு ஏற்கனவே ஜாதககதம்பத்தில் சொல்லிருக்கிறேன் என்று நினைக்கிறேன். மறுபடியும் சொல்லுவதற்க்கு காரணம். இந்த தகவல் ஒரு சித்தரின் வழியாக எனக்கு கிடைத்தது அதனால் வழிகாட்டிய சித்தர்களின் பதிவில் இந்த தகவலை சொல்லுகிறேன்.

சிலையை ஏதோ ஒரு கல் என்று நினைத்துக்கொண்டு அலட்சியமாக அபிஷேகம் செய்வதால் இப்படி காலில் பிரச்சினையை கொடுத்துவிடும். சிலைக்கு  அபிஷேகம் செய்யபடவேண்டும் மனிதர்களுக்கு அல்ல என்பதனை அறிந்துக்கொண்டு சித்தர்கள் செயல்பட்டு இருக்கின்றனர்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: