Followers

Wednesday, June 7, 2017

முன்ஜென்மம்


ணக்கம்!
          மதிய நேரத்தில் ஒரு தூக்கத்தை போட்டுவிட்டு எழுந்தால் ஒரு எண்ணம் வரும் அதாவது ஒன்று கவலையாக இருக்கும் அல்லது இன்னமும் எத்தனை நாளைக்கு இந்த வாழ்க்கை என்று இருக்கும். சென்சிட்டிவாக இருக்கும் மனநிலையில் உள்ளவர்களுக்கு இது எல்லாம் தோன்றும்.

எந்த நேரமும் பணம் அல்லது ஏதாவது ஒரு சிந்தனை என்று இருப்பவர்களுக்கு சத்தியமாக இது எதுவும் தோன்றாது. தூங்கி எழுந்த பிறகு இவர்களுக்கு தலைவலி தான் வரும்.

மதிய நேர தூக்கத்தில் எண்ணங்கள் எல்லாம் முன்னாடி வருவதால் நினைவுகள் நிறைய வரும் என்பது அறிவியல். விடியற்காலையில் நாம் எழுந்தால் மதிய நேரத்தில் ஒரு தூக்கம் போட்டால் நன்றாக இருக்கும். எந்த நேரமும் தூங்கிக்கொண்டே இருந்தாலும் கஷ்டம் தான் வரும்.

நான் சொல்ல வேண்டிய விசயத்திற்க்கு வருகிறேன். மதிய நேர தூக்கத்திற்க்கு பிறகு ஒரு எண்ணம் வரும் அதாவது பல ஜென்மங்கள் இப்படியே சென்றுவிட்டது. இந்த வாழ்க்கையும் ஒரு பெரிய தூக்கம் தான் என்பது போல தோன்றும்.

ஒரு கனவு வருவது போல ஒரு ஜென்மம் முடிந்துவிடுகிறது. அதன் பிறகு அடுத்த ஜென்மம் வந்துவிடும். இப்படியே ஒவ்வொரு ஆத்மாவும் ஒவ்வொரு ஜென்மம் எடுத்துவருகின்றது. 

மதிய நேர தூக்கம் வருவதற்க்கு முன்பு முன்ஜென்மத்தில் எப்படி இருந்து இருப்பேன் என்று நினைத்துவிட்டு படுத்தால் தூக்கத்தில் உள்ள கனவில் அல்லது தூக்கத்தை விட்டு விழிக்கும்பொழுது உங்களின் முன்பு முன்ஜென்ம நினைவுகள் வந்து போகும். இது ஒரு சின்ன பயிற்சி. 

பெண்களாக இருந்தால் இதனை நன்கு கண்டறியமுடியும். ஆண்களாக இருந்தால் கொஞ்சம் கடினம். நீண்ட பயிற்சிக்கு பிறகு இது சாத்தியப்படும். ஆண்கள் அந்தளவுக்கு சென்சிட்டிவாக இருப்பதில்லை என்பது தான் காரணமாக இருக்கின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: