Followers

Tuesday, October 3, 2017

கேள்வி & பதில்


வணக்கம்!
          காரைப்பற்றி நண்பர் ஒரு கருத்தை அனுப்பியிருந்தார். கார் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் இருப்பது நல்லது. சுக்கிரன் அந்தளவுக்கு கெடுவது கிடையாது. அதனையே நான் பயன்படுத்துகிறேன் நீங்கள் சொல்லுவது போல இல்லையே என்று சொல்லிருந்தார்.

நான் சொல்லுவது கலரின் கலரை வைத்து சொன்னாலும் அது தயாரிக்கும் கம்பெனியை பொறுத்து சொல்லுகிறேன். KVB வங்கி என்பதை நீங்கள் எப்படி பார்ப்பீர்கள் என்றால் அது பச்சை நிறத்தில் இருக்கின்றது அதனால் புதனின் அருளை அது தரும் என்பதால் KVB வங்கி கணக்கில் கணக்கை தொடங்க சொல்லுகின்றார் என்று நீங்கள் நினைக்கலாம். 

KVB வங்கி கணக்கை நான் எப்படி பார்க்கிறேன் என்றால் KVB வங்கி என்பது செட்டியார்களின் வங்கி. அதனை ஆரம்பித்தவர்கள் செட்டியார்கள். புதன் செட்டியார்களை குறிக்கும் கிரகம் என்பதால் அதில் நான் வங்கி கணக்கை தொடங்கினேன். பச்சை நிறத்தில் வேறு ஒரு வங்கி கூட இருக்கின்றது என்று நினைக்கிறேன் அதில் நான் கணக்கை தொடங்கவில்லை.

காரை பொறுத்தவரை மக்கள் அதிகம் விரும்புவது வெளிநாட்டு கார்களை வாங்குவார்கள். தரம் நன்றாக இருக்கும் என்று சொல்லுவார்கள். வெளிநாடு என்றாலே அது ராகுவை குறிக்கும் கிரகமாக போய்விடுகிறது. நாம் கொடுக்கின்ற பணம் செல்லும் இடம் வெளிநாடாக இருக்கின்றது. ராகுவோடு நாம் தொடர்பை ஏற்படுத்திக்கொள்கிறோம்.

இந்திய நாட்டில் டாடா கார் இருக்கின்றது. இவர்களிடம் நாம் காரை வாங்கினால் நாம் குரு கிரகத்தோடு தொடர்பை வைத்திருக்கும் நிலை போல உருவாகும். இந்தியபொருட்கள் தரம் குறைவாக இருக்கின்றது என்று நினைத்தாலும் அதன் வழியாக நமக்கு பெரியளவில் காரியம் நடக்கும் என்பதால் இப்படி வாங்கிக்கொள்ளலாம். 

ஒவ்வொருவரின் ஜாதகத்தை பொறுத்து தான் அவர் அவர்களின் வாழ்க்கை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றும் செட்டாகும். அது அவர்களை பொறுத்த விசயம். நமக்கு என்ன தேவை என்பதை நம் செயலில் செய்துவிட்டால் கிரகங்கள் கொடுப்பதை கொடுக்கட்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: