Followers

Wednesday, November 1, 2017

இனிய தொடக்கம்


வணக்கம்!
          ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் பெளர்ணமி அன்று சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வது உண்டு. சிவனுக்கு என்று நிறைய அபிஷேகங்கள் இருந்தாலும் ஐப்பசி அன்று பெளர்ணமி செய்யும் அன்னாபிஷேகம் மிக சிறப்பு வாய்ந்த ஒன்று.

அன்னாபிஷேகத்தை வருடம் வருடம் நாம் பதிவில் சொல்லுவது உண்டு. இதில் கலந்துக்கொண்டு அன்னாபிஷேகத்தில் உள்ள சிவனை தரிசனம் செய்யலாம் அல்லது அன்னாபிஷேகத்திற்க்குரிய அரிசி காய்கறிகளை வாங்கி கொடுக்கலாம்.

உங்களின் அருகில் உள்ள சிவலாயங்களில் விசாரித்தால் எப்பொழுது அரிசியை வாங்கிக்கொடுக்கவேண்டும் என்று சொல்லுவார்கள். அதனை வாங்கிக்கொடுத்துவிடுங்கள். இன்று பிரதோஷம் அதில் கலந்துக்கொள்ள நீங்கள் செல்லும்பொழுது இதனைப்பற்றி விசாரித்துவிடலாம்.

அன்னாபிஷேகம் செய்வது எதற்க்கு என்று நிறைய கருத்துக்கள் சொல்லுவார்கள். என்னுடைய கருத்து உலக உயிர்களுக்கு எல்லாம் உணவு படைக்கும் நாள் என்பது முதல் கருத்து. சந்திரன் தன்னுடைய முழுபலனை திரும்பபெற்ற நாள் என்பது இரண்டாவது கருத்து. 

ஐப்பசி பெளர்ணமி அன்று நல்ல ஒளியை சந்திரன் கொடுப்பதை நீங்களே பார்த்து தெரிந்துக்கொள்ளலாம். சந்திரனுக்கும் சேர்த்து ஒரு வழிபாட்டை செய்வது போல ஆகிவிடும். இந்த வருடம் தோறும் அன்னபிரச்சினை இல்லாமல் வாழ்வதற்க்கு இதனை செய்யலாம்.


விரைவில் அம்மன் பூஜை செய்யப்படும். அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தலாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: