Followers

Thursday, November 2, 2017

கடுமையான தோஷங்கள்


ணக்கம்!
          பித்ருதோஷம் இருந்தால் அவர்களின் குடும்பம் ஒரு விருத்தியை அடையாது என்பார்கள். உங்களின் ஜாதகத்தில் பித்ருதோஷம் இருந்தால் கண்டிப்பாக விருத்தி அடையாது என்பது உண்மையான ஒன்று.

பித்ருதோஷம் இருந்தால் உங்களின் இளைய சகோதர சகோதரிகள் வாழ்க்கை வீணாக செல்லும். அவர்கள் ஒருவிதத்திலும் உருப்படமாட்டார்கள். உங்களுக்கு இளைய சகோதர சகோதரிகள் இருந்து அவர்கள் சரியில்லை என்றால் உங்களின் ஜாதகத்தில் உள்ள பித்ருதோஷம் நன்றாக வேலை செய்கிறது என்று அர்த்தம்.

பித்ருதோஷத்தைப்பற்றி ஏன் இந்த நேரத்தில் சொல்லுகிறேன் என்றால் சுக்கிரனால் வரும் சாபதோஷத்திற்க்கும் இதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும். இரண்டும் ஒன்று போல் வேலை செய்யும்.

ஒரு பெண்ணின் சாபத்தை நீங்கள் வாங்கியிருந்தால் அதனால் வருவது தான் சுக்கிரன் ஒன்றும் வேலை செய்யாமல் போவது இதனால் வரும் பாதிப்பு பித்ருதோஷத்தை விட கொடுமையாக இருக்கும். கஷ்டங்களை அதிகமாக கொடுத்து நம்மை வாட்டி எடுக்கும்.

முன்ஜென்மத்தில் பிரச்சினையால் பெண்களின் ஜாதகத்தில் கூட இப்படிப்பட்ட பிரச்சினை வந்து அவர்களின் வாழ்க்கையும் வீணாக செல்கிறது. அவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. பித்ருதோஷம் மற்றும் சாபம் இரண்டு தோஷமும் இல்லை என்றால் வாழ்க்கை நன்றாக இருக்கும். இதில் ஒரு தோஷம் உங்களின் ஜாதகத்தில் மாட்டினாலும் உங்களுக்கு பிரச்சினை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: