Followers

Wednesday, November 1, 2017

விலையுர்ந்த சுக்கிரன்


வணக்கம்!
          எனக்கு தெரிந்த பணக்காரர்கள் எல்லாம் பெரும்பாலும் டிரை புரூட் போன்ற வகைகளை சாப்பிடுவார்கள். இது எதற்கு என்பது பெரும்பாலும் அவர்கள் சொன்னபிறகு தான் புரிந்தது. உடலில் சக்தி குறைபாடு இல்லாமல் பங்கு ஆற்றுவதில் இது அதிகம் வேலை செய்கிறது என்று சொன்னார்கள்.

பணக்காரர்களுக்கு உள்ள உணவு என்பது இது தானே. சுக்கிரன் காரத்துவம் உடைய உணவுகளில் முக்கிய பங்கு ஆற்றுவது அத்திப்பழம். அத்திபழம் சாப்பிட்டால் உடல் இளமையில் இருக்கும் என்று சொல்லுவார்கள்.

சுக்கிரன் என்றாலே அது விலையுர்ந்த ஒன்றாக தான் இருக்கின்றது. அத்திபழம் கிலோ ஆயிரம் ரூபாய் என்று நினைக்கிறேன். இதனை போலவே பாதம் பிஸ்தா போன்றவைகளையும் இப்படி தான் விலை சொல்லுவார்கள்.

ஏன் இதனை சொல்லுகிறேன் என்றால் சுக்கிரனின் காரத்துவம் அப்படிப்பட்டது. விலையுர்ந்த ஒன்று என்றால் அது சுக்கிரனின் காரத்துவத்தில் வரும். வைரக்கல் விலையை எல்லாம் கேட்டால் நாம் ஆடிபோய்விடுவோம் அல்லவா. அனைத்தும் சுக்கிரனின் காரத்துவத்தில் வருகின்றது.

சுக்கிரனை நம்மோடு இணைத்துக்கொள்வது என்பது அவ்வளவு எளிதான ஒன்று கிடையாது. விலையுர்ந்த அனைத்தும் சுக்கிரனிடம் வரும்பொழுது அதனை நாம் பெறுவதற்க்கு விலையை அதிகம் கொடுக்க வேண்டியிருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: