Followers

Wednesday, November 8, 2017

சுக்கிரன்

ணக்கம்!
          சுக்கிரன் என்றாலே அது காமசக்தியை குறிக்கும் ஒரு கிரகம் என்று சோதிடத்தில் சொல்லி வைத்திருக்கிறார்கள். காமசக்தி உடலில் குறைய குறைய உங்களுக்கு முதுமை வந்துவிடுகிறது.

குளிர்காலத்தில் நிறைய நோய்கள் வந்துவிடுகின்றன. உடலில் எதிர்ப்பு சக்தி குறைவதால் நோய்கள் வந்துவிடுகின்றன. உண்மையில் காமசக்தி நன்றாக இருந்தால் உடலில் எந்த நோயும் வராது. சுக்கிரன் நன்றாக இருந்தால் உடலில் நோய் வராது என்பதை சொல்லுகிறேன்.

கண் கெட்ட பிறகு தான் சூரிய நமஸ்காரம் என்பது போல நாம் உடல் மீது அதிகம் கவனம் வைக்காமல் இருந்துவிடுகிறோம். நோய் வந்த பிறகு தான் உடல் மீது கவனம் வைக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறோம்.

சுக்கிரனின் சக்தியை ஒருவர் வாழ்நாள் முழுவதும் பெற்றுவிட்டால் அவர்க்கு ஆயுள் அதிகம் என்று சொல்லலாம். சனிக்கிரகம் ஆயுள்கிரகம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் ஆயுளை நீட்டிக்க சுக்கிரன் அருள் அளபரிய வேண்டும் என்பது தான் உண்மை. 

நீங்கள் இளம் வயதாக இருந்தாலும் சரி அல்லது வயது அதிகமாக இருந்தாலும் சரி உணவு விசயத்தில் எப்படி இருக்கின்றீர்கள் உங்களுக்கு சுக்கிரனின் அருள் இருக்கின்றதா என்பதை அறிந்துக்கொண்டு செயல்படுங்கள். நீண்ட ஆயுளை பெறுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: