Followers

Thursday, December 7, 2017

சுக்கிரன்


ணக்கம்!
          சுக்கிரன் சூரியனோடு சேர்ந்து இருந்தால் பெரும்பாலும் அது நல்ல பலனை கொடுக்காது என்று சொல்லுவார்கள். ஒரு சிலருக்கு நல்ல பலனை கொடுத்து கொண்டு தான் இருக்கும்.

சூரியன் சம்பந்தப்பட்ட அரசாங்க வேலை எல்லாம் நடப்பது என்றால் கொஞ்சம் சுற்றி வளைத்து நடைபெறும். சுற்று வளைத்து என்றால் ஒரு தடவை நடப்பது இரண்டு தடவை சென்று நடப்பது போல நடக்கும்.

ஒரு சிலருக்கு அரசாங்கத்தில் தேர்வு எழுதியிருந்தால் அந்த தேர்வின் தேர்ச்சி அறிவிப்பு எளிதில் வராமல் இழுத்தடிக்கும். ஒரு சிலருக்கு அரசாங்க தேர்வில் மதிப்பெண் குறைவாக வருவது போல வரும்.

அரசாங்கத்திற்க்கு கட்டவேண்டிய பணம் அபராதோடு கட்டுவது போல அமையும். தேதி காலதாமதம் நடந்து அதனால் அபராதம் கட்டுவது போல அமையும். பண இழப்பு அதிகமாக அரசாங்கத்திற்க்கு கொடுப்பது போல இருக்கும்.

ஒவ்வொருவரின் ஜாதகத்தை பொறுத்து நல்லதாகவும் நடைபெறும். அனைத்தும் எளிதில் நடப்பது போல இருக்கும். கஷ்டம் அதிகமாக வராது. சூரியன் சுக்கிரன் இணைந்து இருந்தால் அவர் அவர்களின் குலதெய்வத்தை பகல் நேரத்தில் வழிபாடு செய்யவேண்டும். காலை நேரத்தில் வழிபாடு செய்தால் ஒரளவு நல்ல பலனை கொடுக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: