Followers

Sunday, February 4, 2018

கண்திருஷ்டி ராசி பகுதி 5


ணக்கம்!
          விருச்சக ராசி
                       உங்களின் ஒவ்வொரு செயல்பாடும் பிறரை விட அதிகமாகவே செய்வீர்கள். பிறர் ஒரு பட்டபடிப்பு படித்தால் நீங்கள் பத்து பட்டபடிப்பை படிப்பீர்கள். இவரை பார் படித்துக்கொண்டே இருக்கின்றார் என்று பிறர் சொல்லும்படி உங்களின் படிப்பு இருக்கும். அதனைப்பார்த்து உங்களின் மேல் பிறர் கண் வைப்பார்கள்.

ஒரு செயல் செய்வதைப்பார்த்து உங்களின் மனைவி கூட உங்களின் மேல் பொறாமைப்படும்படி நீங்கள் செய்வீர்கள். வேலையில் காட்டப்படும் அதிகஈடுபாட்டை பார்த்து உங்களின் மேல் கண் வைப்பார்கள்.

எப்படி திருஷ்டி கழிப்பது
                         ஒரு தேங்காய் வாங்கி வந்து உங்களை அப்படியே வலது புறம் இடது புறமாக மூன்று சுற்று சுற்றி அந்த தேங்காயை முச்சந்தியில் சென்று சிதறுகாய் உடைப்பது போல உடைத்துவிடுங்கள். 

ஒரு எலுமிச்சைபழத்தை எடுத்து உங்களின் மேல் உரசியப்படி வலதுபுறமாக மூன்று சுற்று இடதுபுறமாக மூன்று சுற்று சுற்றி அந்த எலுமிச்சைப்பழத்தை அறுத்து கொஞ்சம் குங்குமம் வைத்து அதனை வீதியில் இருபுறமாக வீசி எறிந்துவிடுங்கள்.

தனுசு ராசி
           உங்களுக்கு எப்படியாவது பணம் வந்துக்கொண்டே இருக்கும். இன்றைய தேதிக்கு சேமிப்பதை விட அடுத்த வருடத்திற்க்கு இப்பொழுதே சேமிக்கவேண்டும் என்று நினைப்பது உங்களின் மேல் பொறாமைப்பட்டு கண்திருஷ்டி வைப்பார்கள்.

பணபுழக்கம் இருக்கும் நபராக பார்த்து பழக்கம் வைத்திருக்கிறார் என்று உங்களின் மேல் அடுத்தவர்கள் கண் வைப்பார்கள். ராஜா போல உங்களின் வாழ்க்கை இருக்கின்றது என்று பிறர் பார்த்து பொறாமைப்படுவார்கள்.

எப்படி திருஷ்டி கழிப்பது
                         ஆறு மிளகாய் கொஞ்சம் உப்பு சாம்பிராணி எடுத்துக்கொண்டு அதனை நெருப்பில் போட்டுவிட்டால் உங்களின் மேல் வரும் கண்திருஷ்டி போய்விடும்.

எலுமிச்சைப்பழத்தை எடுத்து வலதுபுறமாக மூன்று சுற்று இடது புறமாக மூன்று சுற்று சுற்றி அதனைபோய் முச்சந்தியில் அறுத்து போட்டுவிட்டு வந்தாலும் உங்களுக்கு திருஷ்டி போய்விடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: