Followers

Saturday, February 3, 2018

கண்திருஷ்டி


வணக்கம்!
          கண்திருஷ்டி யாருக்கு அதிகபாதிப்பை தரும் என்று ஒரு நண்பர் கேள்வி அனுப்பியிருந்தார். அனைவருக்கும் ஒரே மாதிரியாக பாதிப்பை தருமா அல்லது ஜாதகத்தில் அதற்கு என்று தனியாக ஏதாவது கிரகங்களின் தொல்லையால் வருமா என்று கேட்டார்.

சாதாரணமாக அனைவருக்கும் பாதிப்பை தந்தாலும் ஜாதகத்தில் அதற்கு என்று தனியாகவும் ஒரு சில கிரகங்கள் பாதிப்பை தரும். பொதுவாக மறைவுஸ்தானத்தின் அதிபதிகளின் தசா நடந்தால் அதிகமாக கண்திருஷ்டி வரும். 

மறைவுஸ்தானத்தில் தசாவில் அதுவும் ஆறாவது வீட்டு தசா மற்றும் எட்டாவது வீட்டு தசாவில் அதிகமான கண்திருஷ்டியை ஒருவருக்கு கொடுக்கும். மற்றபடி ஏழரை சனி மற்றும் அஷ்டமசனியிலும் இந்த கண்திருஷ்டி வரும்.

கண்திருஷ்டியில் ஒருவருக்கு கால் அடிப்பட்டால் அது சனியால் வந்த கண்திருஷ்டி என்று சொல்லுவார்கள். உங்களின் காலில் அடிப்பட்டால் கண்டிப்பாக உங்களுக்கு கண்திருஷ்டி இருக்கின்றது என்று சொல்லலாம்.

ஒரு சிலருக்கு காலில் லேசாக அடிப்பட்டால் உடனே நீங்கள் கண்திருஷ்டி எடுக்க ஆரம்பித்துவிடவும் இல்லை என்றால் அது பெரிளவில் வந்து நம்மை தாக்க ஆரம்பித்துவிடும்.

இன்று திருச்சி வரை செல்கிறேன்.  திருச்சியில் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309  
What'sApp Number: 9551155800  


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: