Followers

Thursday, April 12, 2018

தமிழ் புத்தாண்டு என்ன செய்யலாம்?


வணக்கம்!
          தமிழ் புத்தாண்டு பிறக்கும்பொழுது நாம் என்ன மாதிரியான காரியங்களை செய்தால் நல்லது நடக்கும் என்று இப்பதிவில் பார்க்கலாம். தமிழ்புத்தாண்டு பிறக்கும் நாளில் அல்லது அதற்கு முந்தைய நாள் மற்றும் அதன் பிறகு வரும் நாட்களிலும் சித்திரை மாதம் முழுவதும்  தான தர்மம் செய்யலாம்.

ஏழை எளிய மக்களுக்கு ஆடைகள் தானமாக கொடுக்கலாம். செல்வவளத்தை பற்றி எழுதிய நாட்களில் எல்லாம் நான் ஆடைகளை தானமாக கொடுக்க சொல்லிருக்கிறேன். ஒருவருக்கு வாழ்நாள் முழுவதும் செல்லவளம் வருவதற்க்கு ஆடைகளை தானம் செய்தால் போதுமானது.

தமிழ்புத்தாண்டு அன்று அனைவரும் வீட்டில் நல்ல விஷேசமாக இருக்கும் அதனால் அதன் பிறகு வரும் நாட்களில் வீட்டிற்க்கு அழைத்து விருந்து ஏற்பாடு செய்து அவர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.

தற்பொழுது அன்னதானம் செய்தால் யாரும் வந்து அதிகம் சாப்பிடுவதில்லை. இவன் செய்த பாவத்தை போக்க அன்னதானம் செய்கிறான் என்று பலர் விரும்புவதில்லை. அன்னதானம் சாப்பிடும் வகையில் இருக்கும் நபர்களை அழைத்து அன்னதானம் செய்யலாம்.

உங்களால் முடிந்த உதவியை அனைவரும் செய்யுங்கள். ஆங்கிலவருடத்தில் எடுக்கும் சபதம் எல்லாம் விட்டுவிட்டு தமிழ்புத்தாண்டு வருடத்தில் சபதத்தை வேண்டுமானால் எடுத்துக்கொள்ளுங்கள். சபதம் இல்லாமல் வாழ்க்கை நடத்துவது நன்றாக தான் இருக்கும் ஆனால் இல்லறத்தில் இருப்பவர்களுக்கு ஒரு சில இலக்குகள் இருக்கும் அல்லவா அதனால் சபதம் எடுக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: