Followers

Sunday, April 22, 2018

ஆலய தரிசனம்


ணக்கம்!
          நேற்று பழனிக்கு மதியம் சென்றுவிட்டேன். சென்னையில் இருந்து நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவரோடு மாலை அறுபடை வீடான திருஆவினகுடி முருகன் கோவில் அடிவாரத்தில் இருக்கின்றது. அதனை தரிசனம் செய்துவிட்டு மலை ஏறினோம்.

மாலை சாயரட்சை தரிசனம் செய்யவேண்டும் என்று 100 ரூபாய் கட்டணத்தில் சிறப்பு தரிசனம் செய்தோம். இராஜஅலங்காரத்தில் முருகனை தரிசனம் செய்யவேண்டும் என்றால் சாயரட்சை பூஜை முடிந்த பிறகு சென்றால் இராஜஅலங்கார தரிசனம் செய்யலாம்.

நண்பர் இராக்காலபூஜைக்கு சிறப்பு கட்டணம் செலுத்தியிருந்தார். இராக்காலபூஜையில் கலந்துக்கொண்டு நல்ல தரிசனம் செய்தோம். இராக்காலபூஜை நீண்ட நேரம் செய்வதால் நண்பர் அதனை புக் செய்திருந்தார். முருகனுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்து அலங்காரம் செய்கின்றனர்.நல்ல தரிசனம் செய்தோம்.

மாலை 6 மணியில் இருந்து 10 மணிவரை கோவிலில் இருக்கும் வாய்ப்பு இருந்தது. நாம் அடிக்கடி செல்லும் காேவிலில் பழனிமுருகன் கோவில் இருக்கவேண்டும் என்று சொல்லுவது உண்டு. நீங்கள் பழனி சென்றால் இப்படி பூஜைக்கு கட்டணம் செலுத்தி முருகனை அருகில் இருந்து தரிசனம் செய்யுங்கள்.

நான் பழனிமுருகன் கோவிலுக்கு செல்லும்பொழுது பார்க்கும் பக்தர்கள் அனைவரும் சொல்லும் வார்த்தை மாதம் ஒரு முறை வருவோம் என்பது தான் சொல்லுகின்றனர். நீங்களும் இதனை பின்பற்றலாம். அனைவருக்காகவும் நான் பிராத்தனை செய்திருக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: